Wednesday, November 21, 2007
Tuesday, November 20, 2007
கொள்ளைக்குக் காவல் ஏன்?
நல்ல மருத்துவ வசதிகளாகட்டும் அல்லது மருத்துவப் படிப்பாகட்டும், அவை என்றுமே காசு உள்ளவருக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. சமீபத்தில் கூட சென்னைக்கு அருகில் கெளம்பாக்கத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையுடன் புதிதாக ஒரு மருத்துவ நகரையே உருவாக்கியுள்ளனர் செட்டிநாட்டு ராஜ பரம்பரையினர். 100 மைல் பரபளவில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த நகரைக் கருணாநிதி திறந்து வைத்துள்ளார். இந்த மருத்துவ நகரை இவர்கள், ஏதோ ஏழைகளுக்குச் சேவை செய்வதற்காகக் கட்டியது போல கருணாநிதி பேசியுள்ளார்.
நோயாளிகளைக் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவும், மருத்துவம் படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையடித்துக் கோடி கோடியாகச் சம்பாரிக்கவுமே இந்த நகரை இவர்கள் கட்டியுள்ளனர். இதே மருத்துவக் கல்லூரி அண்ணாப் பல்கலைக் கழகம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுக் குறைந்த கட்டணத்தில் படிக்க வந்த மாணவகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் தாங்கள் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டுதான் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் கல்வி வள்ளல் பட்டம் வேறு.
தரமான கல்வியையும், மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட இந்த அரசு அந்தப் பொறுப்பை இந்தக் கொள்ளைக் கும்பலிடம் கொடுத்துள்ளது. இதே மேடையில் கருணாநிதி பேசுகிறார், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை அரசால் தர முடியாதாம் ஆதலால் இது போன்ற தனியார் நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முன் வர வேண்டுமாம். பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகத் திருடனிடமே காவல் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
Posted by
இரும்பு
at
9:22 PM
0
comments
Labels: ஓட்டுப்பொறுக்கிகள், மறுகாலனியாதிக்கம்
Monday, November 19, 2007
சாட்டை இங்கே ராமதாஸ் எங்கே ?
ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:
1. நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!
2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!
3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!
4.எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் - எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!
5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டாள் - இது சத்தியம்! என் தாய்மீது சத்தியம்!
இதையெல்லாம் உங்கள் டையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!
இந்த சத்தியங்களை மிஞ்சும் வகையில் ராமதாஸ், இன்று ஓட்டுப்பொறுக்கி கட்சியாகவும், குடும்ப அரசியல்வாதியாகவும் ஆனது மட்டுமல்ல, போராட்டம் என்ற பெயரில் பணம் கொழுக்கும் பெரிய NGO ஆக மாறி மக்களை ஏமாற்றி வருகிறார்.
இவரையும், இவரைப் போல ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வருகின்ற விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடைகள் ஆனாலும் சரி இவர்கள் ஆரம்பகட்ட வாழ்க்கை , பேசிய பேச்சுக்களை என்ன வென்று சற்று புரட்டினாலும் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் என.
Posted by
இரும்பு
at
9:05 PM
0
comments
Labels: ஓட்டுப்பொறுக்கிகள்
About Me
Blog Archive
steel"s shared items
Labels
அநீதிமன்றம்(1) | அமெரிக்க அடியாள்(1) | அமெரிக்க உளவாளி(1) | ஆர்.எஸ்.எஸ்(3) | இந்து மதவெறி(5) | ஓட்டுப்பொறுக்கிகள்(3) | காவி இருள்(1) | சாதி வெறி(1) | சோசலிசம்(1) | சோவியத் யூனியன்(1) | சோளக்காட்டு மொம்மை(1) | நவம்பர் புரட்சி(1) | பகத் சிங்(1) | பார்ப்பன பயங்கரவாதம்(4) | பார்ப்பனீயம்(1) | மறுகாலனியாதிக்கம்(6) | ராமன்(1) | விபச்சாரத்தின் தரகன்(1) | ஸ்டாலின்(1) |