steel

Tuesday, February 19, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து நடக்கவிருந்த அரங்கக் கூட்டம் - பொதுக்கூட்டமாக நடக்கிறது.


போலீஸ் தடையினை அடுத்து பொதுக்கூட்டம்-ஆக நடக்கிறது - இடம் : எம்.ஜி.ஆர் நகர் மார்கெட்.! !

நேரம் மாலை 6 மணி

Thursday, February 7, 2008

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

நன்றி: தினமலர் தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.

இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.

இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.

இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.
குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

“இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.”

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

செய்திரசம்

Related Articles:

Tuesday, January 29, 2008

காந்தி: வழிகாட்டியல்ல, சோளக்காட்டு மொம்மை

"என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லை?" என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், 'வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத் தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மை தான்.
(புதிய கலாச்சாரம் ஜனவரி 2008-ல் வந்த காந்தி: வழிகாட்டியல்ல, சோளக்காட்டு மொம்மை என்ற கட்டுரையில் இருந்து)

Friday, January 25, 2008

"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
டிசம்பர் "புதிய ஜனநாயகம்"
"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து

Tuesday, January 22, 2008

டாடாக்களின் புரட்சியும் மக்களைத் தின்னும் கண்டுபிடிப்புக்களும்


மக்களின் கார் பிணங்களின் மீது பவனி


"ஏனுங்க டாடாவோட நானோ காரைப் பார்த்தீங்களா?, என்ன அம்சமா இருக்கு தெரியுங்களா" என்ற சித்தாளின் உடையாடலோ, "அம்மா எனக்கு நானோ கார் வாங்கிதந்தாதான் சாப்பிடுவேன்" என்ற கெஞ்சல்களையோ கேள்விப்படவில்லை. ஆனால் இதை விட பல மடங்கு பேச்சுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டதாக பத்திரிக்கைகள் புளுகிக் கொண்டிருக்கின்றன.


பத்திரிக்கைகள் டாடாவின் 1 லட்சம் ரூபாய் நானோ கார் (வரிகளுடன் 1.25 லட்சம்) வரவினை டாடாவின் புரட்சி என்றே அழைக்கின்றன. 1980 களில் இந்திய சாலைகளில் மாருதி நிறுவனம் முதல் சாலைப் புரட்சியை நடத்திகாட்டியதாகவும் இந்த நானோ கார் இரண்டாவது புரட்சியாகவும் கொண்டாடப்படுகின்றன. சிறிது டாடாவின் காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


எஞ்சின் - 624 cc, 33 php, ஒரு லிட்டருக்கு 20 கி.மி மேல், 4 ஸ்பெசல் கியர், அதிகபட்ச வேகம் 90 கி.மி. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் நிறைவு செய்கிறது. ஏழை நடுத்தர மக்களுக்காகவே உலகிலேயே மிக குறைவான விலையில் விற்கப்படும் முதல் கார் 2500 டாலர் (அ) 1 லட்சம். இதற்கு அடுத்தப்படியாக க்யூ க்யூ3 காரோ 2 லட்சம்.


இந்த காருக்கு இருக்கும் விற்பனைக்கான வாய்ப்பை வாய் கிழிய கிழிய நிபுணர்கள் உந்தி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9% எட்டி விட்டது, பங்குச் சந்தை 21,000 (பலுன் ஊதிய போது) புள்ளிகளை தாண்டி எகிறிகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 40 லட்சம் கோடியையும், தனிநபர் சராசரி வருமானம் ரூ 40,000 ஐயும் தொட்டு வல்லரசுக்கு பிளிரிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலன்றி வேறெப்போது புரட்சியினை சாதிக்கமுடியும் என்ற கேள்விகளால் பத்திரிக்கைகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றனர். காம்ரேட் டாடா ஆரம்பித்து வைத்த இந்த புரட்சியை நீடித்து கொண்டு செல்வதற்காகவே பல கார் நிறுவனங்கள் புதிதாக இந்தியாவில் இறங்க உள்ளன.


"உணவி , உடை, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மிதமிஞ்சிய பணப்புழக்கம் இருக்கும் ஒரு நாட்டில் இவ்வருடம் மட்டும் கார்களில் 75 மாடல்கள் தான் அறிமுகமாகுமென்று சற்றே கவலையளிக்கிறது"


டாடாவுக்கு மட்டும் தான் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க உரிமை இருக்கிறதாயென்ன என்றவாறே கடந்த பத்து மாதங்களில் மட்டும் ஆறு பெரிய நிறுவனங்களுக்குள் ரூ 18,400 கோடியில் பேரத்தில் இறங்கியிருக்கின்றன. டாடா, அசோக் லேலண்ட், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு ஏற்றபடி விலை குறைவாக உள்ள காரை எப்படி தயாரிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறதாம். டாடா ஒரு லட்ச ரூபாய்க்கு மக்கள் கார் கொடுப்பதால் நான் 1.3 லட்சத்திற்கு கார் தருகிறேன் என மல்லுக் கட்டுகிறார் ராஜீவ் பஜாஜ்.


அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க கார் சந்தை தேக்கமடைந்திருப்பதால் இந்தியாவில் 45 கோடி நடுத்தர மக்கள் இருப்பதாகவும், அவர்கள் அத்தேக்கத்தை (அடைப்பை) சரி செய்துவிடுவார்களென்று பன்னாட்டு கார் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு கடையை விரிக்கின்றன. 10 லட்சம் கார்களையும், 76 லட்சம் பைக்கு களையும் நுகரும் இந்திய சந்தையில் 2016க்குள் 40 லட்சம் கார்கள் 1 ஆண்டுக்கு திணிப்பதற்கு காத்திருக்கிறார்கள்.


இந்த மக்கள் காரின் வரவுக்கு எந்த சமூக அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை இக்கார் சமூக அக்கறையினால் உருவாக்கப்பட்டதெனில் ஜெயேந்திரன் கூட சமூக அக்கறையினாலேயே கொலைகளையும், கற்பழிப்புக்களையும் தீண்டாமையையும் நெறிப்படுத்தினான் என்றே கூறலாம். சினிமா கழிசடைகளும், ஏகாதிபத்திய நாய்களும் தாங்கள் பொறுக்கித்தின்பதற்காக இதை சமூக அக்கறையாக பயன்படுத்திக்கொள்கின்றன. மூன்று இந்தியர்களின் ஒருவர் பஞ்சைப் பராரியாக இருப்பதும், 91 கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் ரூ 80க்கும் கீழ் போய்விட்ட இத்தேசத்தில் இந்த ஏகாதிபத்திய "புடுங்கிகள்", மக்களின் கவலையை மறக்க விலை குறைவாக காரைக் கண்டுபிடிக்கிறார்களாம்.


விவசாயம் செய்ய முடியாது என மறுகாலனிய சுருக்கில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்களின் பட்டாளம் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. பொதுத் துறைகளை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் சீரழித்து தொழிலாளர்களை வீதியில் வீசியெறிக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்காகத் தான் மக்கள் கார் தயாரிக்கப்பட்டதாம்.


ரத்தன் டாடா ஒரு பேட்டியில் கூறியது "குறைந்த லாபத்தில் காரை தயாரிக்க முடியாது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பங்களிப்பு செய்ய விரும்பினோம்.....குறைவான லாபத்தோடு சில தியாகங்களை செய்தாக வேண்டும்"


110 கோடி கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு முதலாளியால் முடியும். இந்த புரட்சியை சாதிக்கவே மக்களை வெளியேற்றி நந்திகிராமில், சிங்குரில் நிலம் கையகப்படுத்தினோம் என்கிறது சிபிஎம். இதனை அடுத்த தேர்தலுக்குள் புரட்சி சாதிக்கப்பட்டு சிபிஎம்-ன் பேனர்களில் டாடா படம் கூட பொறிக்கப்படலாம். ரசியப்புரட்சியை நடத்திக்காட்டிய லெனின் படத்துடன், மாமா வேலை பார்த்த சுர்ஜித்தின் படத்தை போடும் போது மக்களின் வாழ்க்கையை (?) உயர்த்த விரும்பி தனது இலாபத்தை குறைத்துக் கொண்ட மகோன்னதத் தலைவனின் படத்தை ஏன் போடக்கூடாது என்ற வகையில் தீக்கதிர் தலையங்கம் கூட எழுதலாம்.


"முதாலளித்துவத்தின் எந்த கண்டுப்பிடிப்பும் மக்களுக்காகயிராது சந்தைக்காகவே இருக்கும்"


கார் என்பதைப் பொறுத்த வரை இன்று மக்களுக்கு இடையூராகவே உள்ளது. ஒரு காரில் அதிகபட்சம் 6 பேர் உட்கார முடியும். இரண்டு கார்களின் அளவானது ஒரு பேருந்தின் அளவுக்கு சமமாக உள்ளது. குறைந்தபட்சம் 60 பேர் உள்ள பேருந்தின் இடத்தை 12 பேர் கொண்ட கும்பல் ஆக்கிரமிக்கின்றது. காரை வாங்குவதால் நடுத்தர மக்களும், அதனை பயன்படுத்துவதால் நடுத்தர - ஏழை மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இரு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை இறைவாகவே இருந்தது. இன்று இரு சக்கரவாகனமின்றி வாழ்நிலை மிகவும் சிரமம் என்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.


இந்த இருசக்கர வாகனத்தின் பெருக்கம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதே! சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதை தவிர்த்துவிட்டு திரும்பிபக்கமெல்லாம் விளம்பரங்கள் "சார் பைக் லோன் வேண்டுமா உடன் தொடர்புக்கு!!" என்று. இவை விளம்பரங்களாக செயல்படவில்லை. கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற ஆணையாகவே இருந்தது. அப்படி வாங்கியவர்கள் லோன் கட்டமுடியாமலோ (அ) Petrol-க்கென்றே வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டு இருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள் இப்படி "இந்த சனியனாலதான் எல்லாப் பிரச்சினையுமே , இருந்தாலும் இதைவிடமுடியலையே!


கடந்த ஐந்து ஆண்டுகளில் Petrol பொருட்களின் விலை 5 மடங்காகியிருக்கிறது. தற்போது மீண்டும் Petrol, டீசல், கேஸ் விலையை ஏற்றப்போவதாக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் அறிமுகப்படுத்தப்படும் மக்கள் கார் மக்களின் வாழ்க்கையை கேலிக்குரிய ஒன்றாகவே மாற்றும். பைக்கிற்கான கடனைப் போலவே தற்போன காருக்கான கடன் சலுகைகள் மிக அதிகமாக உள்ளது. சமூக அடையாளத்திற்கான இடத்தை நகரக்ங்களைப் பொருத்தவரை பைக்கிடமிருந்து கார் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.


முன்பெல்லாம் காருக்கான மூலதன செலவு (initial cost) அதிகமாகவும், பராமரிப்பு செலவு (maintenance cost) குறைவாகவும் இருந்தது. தற்போது மூலதன செலவு குறைந்தும், பராமரிப்பு செலவு அதிகமாகவும் மாற்றப்படுகின்றது. எப்படியிருந்தாலும் தன்னுடைய லாப விகித்ததை சரி செய்து கொள்கிறார்கள் முதலாளிகள்.


"சாலைகள் மேம்பட வேண்டும் என்பது உண்மைதான் அதற்காக குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்கைத்தரம் உயரக் கூடாது என சொல்லக் கூடாது" என்கிறார்கள் புத்திசாலிகள். முதலாளித்துவ நாய்களின் வாலை பிடித்து கொண்டு திரியும் இந்த அறிவிஜீவிகள் கிராமப்புறங்களில், ஏன் சென்னை போன்ற நகரங்களின் தெருக்களில் கூட சாலைகள் குண்டும் குழுகளும் பல்லைக்காட்டிக்கொண்டிருப்பதை ஒருக்காலும் பேசமாட்டார்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சீரழித்தவர்களே சொல்கிறார்கள். "உங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றப் போகிறோம், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னேறித்தானாக வேண்டும்"


இன்னமும் இந்தியக்கிராமங்களில் மக்கள் டிராக்டரில் பயணம் செய்வதால் இந்தக்கார் பெரிய ஹிட் ஆகுமென்கிறது டாடா. 50,000 ரூபாய் கொடுத்து பைக்வாங்கும் ஒருவரால் கொஞ்சம் சிரமப்பட்டால் லட்சரூபாய் கார்வாங்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது. இதில உண்மையும் இருக்கிறது. மக்களை மேலும் மேலும் கடனாளியாக்க இப்படி எத்தனையோ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பட்டபின் திருந்தலாம் என்று வாங்கிய காரை விற்க போகும் போது அது 3/1 பங்கு கூட பெறாமலிருக்கும். பைக்காக இருக்கும்பட்சத்தில் நான்கு தெரு தள்ளி கூட நண்பர் வீட்டில் நிறுத்திவிடலாம் மாத தவணை வசூலிக்கும் குண்டர்களிடமிருந்து தப்பிப்பதற்காக. காரை எங்கு போய் நிறுத்துவது?


இன்று வீட்டு வாடகைக்கு இடம் கிடைக்காத நிலையில் காருக்காக தனியாக இடம் தேடி நடுத்தர வர்க்கம் அலையும் நிலை வரலாம். இது அதிகப்படியான கற்பனை அல்ல. மறுகாலனியாதிக்கத்திற்கெதிராக களத்திலிறங்காத வரை இது தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.


"வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் நோக்கத்தை சிறுபிரிவினர் விரும்பாதது போலத் தெரிகிறது.... மீதமுள்ள சமூகத்தினருக்காக முடிவெடுக்க சிறுபிரிவினருக்கு உரிமையிருக்கிறதா என்பதே என் கேள்வி" என்கிறான் டாடா. ரத்தன் டாடா முடிவெடுத்து விட்டார் கார் தயாரிக்க, அதுவும் லட்ச ரூபாய்க்கு மக்களின் வாழ்க்கைததரத்தை உயர்த்துவதற்காக. அவர் முன்னரே சொன்னது போல் குறைவான லாபத்தை அவர் ஏற்பார், தியாகங்களோடு, உயர்ப்பலியையும் நந்திகிராம், சிங்கூர் மக்கள் ஏற்க வேண்டும்.


இன்று நீதிமன்றத்தில் இந்த சிபிஎம் குண்டர்கள் வைத்த டாடாவின் குறைந்த லாபத்தையும், மக்களின் அகதிகளாக வெளியேற்றப்படுவதையும் சரிபார்த்த "நீதிமான்கள்" நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என்று அதனை எதிர்த்து தொடர்ந்த 11 வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது.


மக்கள் கார் (!?) புரட்சிக்கு பின்னாலுள்ள பிளாஷ் பேக்கை பார்ப்போம். "2003ம் ஆண்டு ஒரு நாள் மும்பையில் இரவு மழையின்போது சென்று கொண்டிருந்தார் டாடா. அப்போது ஒரு இளந்தம்பதி இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்களாம். மழைநேரத்தில் இந்த அபாயகரமான பயணம் அவர் மனதில் விதையாகி தற்போது மரமாகிவிட்டதாம்"


அய்யா, புரட்சி இப்படி ஒரு முதலாளியின் செரிக்காத வாயு நாற்றத்திலிருந்து எழாது.


புரட்சி என்பது மக்களின் போர்க்குரல், எரிமலையின் சீற்றம். இந்த சீற்றம் நிகழும் அன்று காம்ரேடு டாடாக்களும், அவர்களின் பாதந்தாங்கிகளாக அருவருடிகளும், போலிகளும் சமாதியாகிக் கொண்டிருப்பார்கள்.

Monday, January 21, 2008

விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?


எச்சரிக்கை! எய்ட்ஸ் வியாபாரிகள்

10 ஆண்டுகளுக்கு முன் புதிய கலாச்சாரத்தில் வந்த "விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?" என்ற கட்டுரை தற்போது ஆணுறை வியாபாரத்திற்கு NGO கள் தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கும் காலத்தில் மறுபதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என பிரசுரிக்கப்பட்டு உள்ளது. இதில் என்ன கூடுதல் பொருத்தம் என்றால் அன்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சராக கருணாநிதி என்பது. இன்றும் இவர்கள் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன முன்னேற்றம் என்றால் லட்சக்கணக்கான கோடியினை தங்கள் முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படுத்திய இவர்கள் தங்களது சொத்தை பல்லாயிரக்கணக்கான கோடியாக உயர்த்தியதும் 83 கோடி இந்திய மக்களின் தினசரி வருமானத்தை ரூ 20 ஆக ஆக்கியதும் தான்.

ஐம்பதாம் ஆண்டு சுதந்திரத்தின் (?) விழாவைக் கொண்டாடும் ஆட்சியாளர்கள் நாடெங்கும் 'தேசபக்தி' பிரச்சாரம் செய்கிறார்களோ இல்லையோ, எய்ட்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டை நோக்கி மக்களை இழுத்துப் போக இருபத்தியோரு சானல்களை திறந்து தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்று ஆரம்பித்தபோது எதிர்த்து விமர்சித்தவர்களைப் பார்த்து, "உலக நாடுகளோடு போட்டி போட்டு முன்னேற இதெல்லாம் அவசியம், சும்மா குறைசொல்வதை விட்டு பாசிட்டிவ்வான விசயத்தைப் பாருங்கள்", என்று அறிவுரை கூறினார்கள் அமைச்சர் பெருமக்கள். இவர்கள் தீட்டிய திட்டங்களினால் ஏழை, எளிய மக்களுக்கு என்னடா பாசிட்டிவ்வான சங்கதி என்று எட்டிப் பார்த்தால் நாடு முழுக்க ஓரே எச்.ஐ.வி பாசிட்டிவ் ஆக இருக்கிறது.

"லாரி வாகன தொழிலாளர்கள் தான் அதிகம்; இல்லை நடுத்தர வர்க்க ஆசாமிகளின் எண்ணிக்கையும் அதிகம்; பெண்கள்; குழந்தைகள் தப்பவில்லை என்று மக்களிடம் சதவிகித கண்க்கைக் காட்டிவிட்டு, எய்ட்ஸின் சமூக தோற்றுவாய்க்கு காரணமான அரசும், ஆளும் வர்க்கமும் தப்பித்துக் கொள்கிறது.

எந்தவொரு சமூக சீரழிவும் அரசாங்கத்தின், அதிகார வர்க்கத்தின் துணையின்றி நடப்பதில்லை என்பது நாடே அறிந்த சங்கதி. சாராயாம், சூதாட்டம், சுரண்டல் லாட்டரி, ஆபாச சினிமா, ஆபாச புத்தகம், விபச்சாரம் என ஒவ்னொன்றையும் மெல்லமெல்ல அறிமுகப்படுத்தி தொழிலாக்குவது பின்பு அது சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தி பிரச்சினைகள் கிளம்பியவுடன் "இனி என்ன செய்வது? சாராயத்தை ஒழிக்க முடியுமா? விபச்சாரத்தை ஒழிக்க முடியுமா? ஜனங்கதான் இதுக்கெல்லாம் போகாம இருக்கனும்; அவங்கதான் விரும்புறாங்க", என்று பழியை மக்கள் மீதே போட்டு, மேற்பூச்சு நடவடிக்கைகள் எடுப்பதுதான் அரசாங்கத்தின் வாடிக்கை.

சிகரெட் பெட்டியில் "புகை உடல்நலத்திற்கு தீங்கு" என்று எழுதி வியாபாரம் செய்வதுபோல, மதுப் புட்டியில் "குடும்பத்தைக் கெடுக்கும்" என்று எழுதி வியாபாரம் செய்வது போல "எய்ட்ஸை தடுக்க நிரோத் உபயோகியுங்கள்" என்று எய்ட்ஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற அரசும், தன்னார்வ அமைப்புகளும். ஒழுக்கம், அன்பு, அகிம்சை என்ற பாதையில் தொடர்ந்து முன்னேறிய "கதர் வியாபாரிகள்" இவ்வளவு சீக்கிரம் நிரோத் வியாபாரிகளாக வளர்ந்திருக்கிறார்கள் என்றால், எல்லாம் புதிய பொருளாத கொள்கையின் மகிமைதான்.

அன்னிய மூலதனத்தைப் புகுத்தி விவசாயம், கைதொழில், சிறு தொழில்களை நசுக்கி நாசமாக்கி ஆயிரக்கணக்கான மக்களை குடும்பம் குடும்பமாக விபச்சாரத்தில் ஈடுபடுமளவுக்கு வாழ்க்கையை சீரழித்தது யார்? இதற்குக் காரணமான இந்த அரசாங்கமும், அதிகார கும்பலுக்கும் "எய்ட்ஸை" பற்றி விழிப்புணர்வூட்ட எந்த அருகதையும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க இவர்களின் அணுகுமுறையே, எய்ட்ஸை ஒழிக்கப் போவதில்லை என கட்டியம் கூறுகிறது.

எய்ட்ஸை ஒழிப்பதைவிட ஆணுறை விற்பதிலேயே அரசாங்கம் குறியாய் இருக்கிறது. இது மிகையில்லை. வக்கிர சிந்தனைகளை வாரி வழங்க வகைவகையான சானல்கள், ஆபாச திரைப்படக் காட்சிகள், நட்புத் தொலைபேசி என்ற பெயரில் பேச்சு விபச்சாரம், பாலியல் சுற்றுலா என்று அனைத்தையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டே மக்களிடம் "மனக் கட்டுபாடு அவசியம்" என்று இரட்டை வேடம் போடும் இந்த அயோக்கியத்தனத்தை ஒழிப்பதல்லவா முதல் அவசியம்.

சமீபத்தில் மகாலிங்கபுரத்தில் சிறுவர்கள் விபச்சாரம் பற்றி தெய்தி வெளியே வந்தபோது இந்திய சுற்றுலாத் துறை, மற்றும் காவல் துறை அதிகாரிகள் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தொட்டு உதிர்த்த வாக்குமூலம் இது, "வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், அவர்களின் வருகையே நின்றுபோகும். சுற்றுலா வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகையால் குற்றவாளிகளை கடுமையாக ஏதும் செய்ய முடியாது"

பார்த்தீங்களா? எவன் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன கல்லா பெட்டிக்கு காசு வந்தால் போதும் என்று அரசியல் விபச்சாரம் செய்யும் இந்த ஆளும்வர்க்க கும்பலா எய்ட்ஸை ஒழிக்கப் போகிறது?!

இந்திய கலாச்சாரம், புனிதம் என பொய்த்திரைகள் களைந்து கூட்டாளி நிர்வாணப்பட்டு நிற்கும் போது பங்காளி பார்த்துக் கொண்டிருப்பானா? எய்ட்ஸின் பிதாமகன் அமெரிக்கா (USAID) உடுக்கை இழந்த இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

குறிப்பாக தமிழ் நாட்டில் வி.எச்.எஸ் (வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ் என்ற தன்னார்வ அமைப்பிற்கு 36 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு ஆள் அமர்த்தியுள்ளது. யாரால் எய்ட்ஸ் தோன்றியதோ, அவனே இங்குவந்து யார், யாருக்கு 'எய்ட்ஸ்' இருக்கிறது என்று அக்கரை எதிர்க்கத் தோன்றுமா? இந்தியாவின் உறவு கொள்கை வரை ஆராய்வதற்கு அமெரிக்காவுக்கு இல்லாத உரிமையா?

அதாவது வியாபாரம் என்பது கேவலமில்லையாம், விபச்சாரி என அழைப்பதுதான் பாவமாம். ஆனால் பாலியல் தொழிலாளர் (Sex - worker) என பங்குவமாக அழைக்கச் சொல்கிறது. இந்த அறிவாளிகளின் அகராதிப்படி இனி திருடனை திருடன் என்று அழைக்கக் கூடாது. களவுத் தொழிலாளி என கவுரவமாக அழைக்க வேண்டும்.

புதுப்பட்ஜெட் தயாரித்து ப.சிதம்பரம் சொன்னதுபோல, இனி கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. அப்படியே வெளுப்பாக்கி கொள்ளலாம் என்றார். அதன்படி விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. எனவெ அதையும் ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எந்தச் சீரழிவையுமே ஒழிப்பதற்கு பதில், அதை ஒரு தொழிலாக ஆக்குவதிலேயே தன்முனைப்பைக் காட்டுகிறது அரசாங்கம்.

எய்ட்ஸ், ஊழல் எதுவானாலும் "பாதுகாப்பாக விளையாடுங்கள்" என்பதையே பண்பாடாக உருவாக்குகிறது அரசு. இதற்கான வேலைகளையும் மும்மூரமாக நடக்கிறது.

மைல் கணக்கில் நடந்துபோய், மணிக்கணக்கில் காத்திருந்து ரேஷன் அரிசி வாங்கிவரும் சிரமத்திற்கு மாற்று ஏற்பாட்டிற்கு வழி செய்யாத அரசு, கைக்கெட்டும் தூரத்தில் ஆணுறைகளை அள்ளிக் குவிக்கிறது.

இவர்களின் 'எய்ட்ஸ் கட்டுப்பாட்டை' நிரோத் அட்டை கவர்ச்சியே எடுத்தெறியும் அளவுக்கு, தொழில் சூடு பிடித்துள்ளது. பிரபலங்கைன் டி.வி விளம்பரம் முதல், விலாசம் எழுதப்படாத (இன்லெண்ட்) உள்நாட்டு காகிதம் வரை எய்ட்ஸ் எச்சரிக்கையுடன் நிரோத் விளம்பரம் இளைய பாரதத்திற்கு வழிகாட்டுகிறது. தனித்தனி ஊசி, இலவச பரிசோதனை, இன்னும் ஒரு படி மேலேபோய் வரலாற்றில் பதிக்குமளவுக்கு சாலையோரங்களில் மரங்களை நட்ட பெருமை அசோகருக்கென்றால், ஆணுறை தானியங்கி நட்ட பெருமை கருணாநிதிக்கு எனுமளவுக்கு அப்படியொரு கட்டுமான வேலை நாடெங்கும் நடக்கிறது.

பாவம் இதையெல்லாம் கண்ணாரக் காண ஒருவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆசையாய் அறிமுகப்படுத்திய ஐந்து நட்சத்திர கலாச்சாரம் இவ்வளவு சீக்கிரமாய் எச்.ஐ.வி பாசிட்சிவாக மலரும் என்று தெரிந்திருந்தால், போயும் போயும் போபர்ஸ் பீரங்கியில் பெயரைக் கெடுத்துக் கொண்ட ராஜீவ் காந்தி தேச பாதுகாப்புக்காக ஒரு ஆணுறை கம்பெனி ஒப்பந்தத்திலேயே பணத்தை கமுக்கமாக அள்ளியிருக்கலாம். அதை அளவிற்கு எய்ட்ஸை ஒழிப்பதற்கான அடிப்படையை மாற்றாமல், நோய்க்கு உறை தைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் வியாபாரிகள்.

இதில் பத்திரிகையில் வாளிப்பான உடலையும் , எலும்பு துருத்திய உடலையும் பக்கம் பக்கமாக போட்டு, இப்படி இருந்தவனை, இப்படி ஆக்கிவிட்டது "எய்ட்ஸ்" என்ற விளம்பரம் வேறு; ஆபத்தைத் தடுக்க ஆட்சியாளர்களுக்கு தெரிந்த ஒரே வழி "எய்ட்ஸ்க்கு நிரோத்; இந்தியாவிற்கு காந்தியம்"

எலும்பும் தோலுமாக இருக்கும் தொழிலாளி; எப்பவுமே துருத்தி இருப்பதற்கு யார் காரணம்? எய்ட்ஸா? அரசா? நமக்குத் தெரியும் எய்ட்ஸை வியாபாரம் செய்யும் அரசும், அதிகார வர்க்கமுமே அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம்; இனியும் நம்முடைய இரத்தத்தை பசிசோதித்துக் கொண்டிருப்பதில் பலனில்லை; இந்திய ஆளும் வர்க்கத்தை ஒரு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எய்ட்ஸ் உள்ளிட்ட எதற்கும் தீர்வில்லை.

- சித்தன்

நன்றி புதிய கலாச்சாரம்

Tuesday, December 18, 2007

"தோழர் ஸ்டாலின்" - வெல்லமுடியாத சகாப்தம்


ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் "கோபா"

1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு "டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது" என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.

1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் "தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு" என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு "இரும்பு மனிதன்" எனும் பொருள் கொண்ட "ஸ்டாலின்" என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் "ஸ்டாலின்" என்ற பெயர் இணைக்கப்பட்டது.

தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.

1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.

முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி " இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்" என்றார். உடனடியாக குழந்தைகள் "ஆறுமாதம் சிறை கிடைக்கும்" என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.

உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.
.....
நாடுகள் -----------1929 ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933
..
அமெரிக்கா -----------100 -----. 80.7 ---- 63.1 ------- 59.3 -------64.9
பிரிட்டன் -----------100 ------ 92.4 ------ 83.8 ------ 83.8 -------- 86.3
ஜெர்மனி ----------100 ------- 88.3 ------- 73.7 ----- 59.8 -------- 66.8
பிரான்ஸ் ------------100 ------ 100.7 ---- 89.2 ------- 99.3 - ------- 77.4
சோவியத் யூனியன் -----100 ---- 129.2 ------ 161.9 ---- 184.7 -- ----- 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.

'கிரெம்ளினைக் கைப்பறுவேன்' என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.

இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!

ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .

ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.

ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.

1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.

உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.

சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.

எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.

மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.

உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.

இணைப்பு