Tuesday, December 18, 2007

"தோழர் ஸ்டாலின்" - வெல்லமுடியாத சகாப்தம்


ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் "கோபா"

1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு "டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது" என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.

1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் "தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு" என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு "இரும்பு மனிதன்" எனும் பொருள் கொண்ட "ஸ்டாலின்" என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் "ஸ்டாலின்" என்ற பெயர் இணைக்கப்பட்டது.

தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.

1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.

முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி " இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்" என்றார். உடனடியாக குழந்தைகள் "ஆறுமாதம் சிறை கிடைக்கும்" என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.

உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.
.....
நாடுகள் -----------1929 ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933
..
அமெரிக்கா -----------100 -----. 80.7 ---- 63.1 ------- 59.3 -------64.9
பிரிட்டன் -----------100 ------ 92.4 ------ 83.8 ------ 83.8 -------- 86.3
ஜெர்மனி ----------100 ------- 88.3 ------- 73.7 ----- 59.8 -------- 66.8
பிரான்ஸ் ------------100 ------ 100.7 ---- 89.2 ------- 99.3 - ------- 77.4
சோவியத் யூனியன் -----100 ---- 129.2 ------ 161.9 ---- 184.7 -- ----- 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.

'கிரெம்ளினைக் கைப்பறுவேன்' என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.

இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!

ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .

ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.

ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.

1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.

உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.

சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.

எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.

மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.

உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.

Thursday, November 29, 2007

அடிமைத்தனங்களே நாகரிகமாக!

சாதிய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத ஏகாதிபத்திய படிமானங்கள்

இது இருபத்தோராம் நு¡ற்றாண்டு இங்கே யார் சாதி பார்க்கிறார்கள்? சாதியை கேட்பதே நாகரிகக் குறைவு.சொல்லப்போனால் உங்களை போன்றவர்கள்தான்இல்லாத பிரச்சனையை பற்றி பேசுகின்றீர்கள்.
..
"கல்வி சாதியை ஒழிக்கும்,அவர்களூக்கு என்ன குறை? அரசாங்கம் அவர்களுக்கு எல்லா வசதியும் தான் தருகின்றதே!"சொல்லப்போனால் பெண்கள் எல்லாதுறையிலும் தான் முன்னேறிவருகின்றார்கள்.பிற்கலத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் அளவுக்கு ஆகப்போகுதுன்னு மட்டும் பாருங்க! இது ஐ.டி.காலம் புரிஞ்சுகோங்க!
..
இப்படிப்பட்ட பேச்சுக்கள் தான் மானங்கெட்ட இந்தியத்துக்கு பூ வைத்து அழகு பார்க்கின்றன.என்ன தான்சப்பைகட்டு கட்டினாலும் வருணாசிரம வெறியை மொத்தமாய் குத்தகை எடுத்திருக்கும்,பார்ப்பனீயத்தை வீழ்த்தாமல் சமத்துவம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல சம்பவங்கள் நிகழ்த்தபடுகின்றன எனலாம்.
..
விழுப்புரம் மாவட்டம்,சின்னசேலம் அருகே உள்ள மரவாநத்ததை சேர்ந்தவன் சின்னசாமிகவுண்டன்.இவனுடைய இரண்டாவது மகள் சுதா கல்லூரியில் படிக்கும் போதே நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனை காதலித்து இருக்கிறார்.படிப்பு முடிந்ததும் இமச்சல பிரதேசத்தில் வேலைகிடைத்துவிடவே,காதலுக்கு வீட்டில் அனுமதி கிடைக்காததால் தமிழ்ச்செல்வனின் குடும்ப சம்மதத்தோடு திருமணம் நடந்து விட்டது.எட்டு மாதம் கழித்து வளைக்காப்புக்காக தமிழ்ச்செல்வனின் சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்திருக்கிறார்.
..
இத்தகவல் தெரியவரவேசின்னசாமிகவுண்டனும் அவனுடைய மூன்றவது மகன் சங்கரும் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.சுதா விட்டுக்கு வந்ததும் அவருடைய அப்பனும் தம்பியும் சேர்ந்து கடப்பரையால் அடித்து கொன்றிருக்கின்றனர். தப்பித்தவறி குழந்தை உயிருடன் பிறந்துவிடக்கூடாது என்பதற்காக வயிற்றிலும் அடித்திருக்கின்றார்கள்.
..
------------------------------------------------------------------------------------------------
அது எல்லாம் படிக்காத முட்டாள் கிராமத்து என்று வாய்கிழிய பேசுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும் சின்னசாமிதான் படிக்காதவன் முட்டாள். சரி அவனுடைய மகன் சங்கர் யார் தெரியுமா?நன்றாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும் அடிமைகளில் ஒருவன்.28 வயதான சங்கர் சாதியை ஒழிக்கும் படிப்பை படித்துவிட்டு"ஆபீஸ் டைகர்"என்ற பன்னாட்டு நிறுவனத்தில் சென்னை ஒன்றில் அம்18,000 சம்பளம் வாங்கும் மேற்பார்வையாளன்.
..
சாதீய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத இந்த நாகரீகம்,இந்த அடிமைத்தனம் பார்ப்பனீயத்தை போற்றி பாதுகாத்து வருகின்றன.ஏகாதிபத்தியமும் பார்ப்பனீயமும் தண்டவாளங்களை போல செயல்படுகின்றன.ஒன்றிற்கு ஒன்று பாதுகாப்பு அரணாக இருக்கின்றனன்
..
இந்த இடத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவது முக்கியமானது இரண்டு 1.பாலின சமத்துவம் 2.நட்பு
..
" இப்போது பெண்கள் தான் எல்லா விசயத்திலும் முன்னாடி இருக்காங்க.பஸ், ரயில்எல்லவற்றிலும்பெண்களுக்குதனிசலுகை,தியேட்டரில் டிக்கட் எடுப்பதிலிருந்து பேங்க் க்யூ வரை பெண்களுக்கு சலுகை தான்.பெண்கள் முன்னே வரணும்ங்கிறதுக்காக அரசு என்னனவோ திட்டம் போடுது.அதிகமா இடம் கொடுத்தது தப்பா போச்சு,துளிர்விட்டுபோச்சு,நம்ம கலாச்சாரத்தையே கேவலப்படுத்தறாங்க "
..
இப்படிப்பட்ட ஆசனவாய் அரிப்புகளை பார்ப்பனீயசெரிப்பில் கழிவாகிப்போன ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் கூடத்தான் சொறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.பேருந்தில் பெண்களின் இருக்கைகளில் உட்கர்ந்து கொண்டு எழ மறுக்கும் ஆண்கள் ஆண் உரிமையை பேசுகிறார்கள்.ஆடுகள் அதிகமாகி விட்டால் எவ்வளவு தான் சாப்பிடுவதென ஓநாய்கள் கவலைப்படுகின்றன.
..
பெண் பிறப்பு முதல் இறப்பு வரை நுகர்பொருளாக்கப்படுகின்றார்.பல இடங்களில் பொருளை பார்த்தவுடனேயே புதை குழிக்கு அனுப்பப்படுகின்றது.
பெண்களுக்கென பல்லாங்குழி,தாயம்,கண்ணாமூச்சி,போன்ற உடலை வலுச்சேர்க்காத விளையாட்டுக்களே ஒதுக்கப்படுகின்றன.விளையாட்டு என்பது உடலையும்,மனதையும் வலுப்படுத்தவதாயிருக்க வேண்டும்.விளையாட்டுக்கள் மறந்து கூட பெண்களுக்கு வலுச்சேர்த்திடக்கூடாதென்பதில் தீவிரமாய் இருக்கிறது இச்சமூகம்.குறிப்பிட்ட வயது எட்டியவுடன் என் பெண் வயதுக்குவந்துவிட்டாள் எனக்கூறி நேரடியகவே விற்பனை சரக்ககவே மாற்றுகின்றது.இந்த வயதில் புதிதாய் முளைக்கின்றது கேள்விகள்"பொம்பளை பிள்ளைன்னாஅடக்கஒடுக்கமா இருக்கணும்".என் பெண்ணின் உடலில் எற்பட்ட அறிவியல் மாற்றத்தை ஏன் மற்றவனுக்கு தெரிவிக்கவேண்டும் என எந்த அப்பனும் நினைப்பதில்லை.
..
கல்லு¡ரிக்கு அனுப்பப்படும் போது ஆண்களுக்கு போதிக்கப்படாத கற்பும்,ஒழுக்கமும் பெண்களுக்கு மட்டும் அறிவுறுத்தப்படுகின்றன.கேட்கும் கேள்விகளுக்கு நான் விரும்பும் பதிலைத்தான் தரவேண்டும் இது தான் இச்சமுகம் போட்டிருக்கும் கட்டளை.கல்லூரியிலும் சரி அலுவலகங்களிலும் சரி ஆபாசமாக பேசுவதும்,தரக்குறைவாக நடந்து கொள்வதும் ஆண்களின் பிறப்புரிமையாகவும் இதை பெண்கள் அமைதியாகவும் இருத்தலே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அலுவலகத்தில் ஒரு ஆண் நண்பருடன் பழகுவது என்பது எண்ணளவில் விபச்சாரத்தனமாக நடந்து கொள்வது அங்கீகரிக்கப்படுகின்றது.அதாவது ஆண் நண்பனை கேள்விக்குள்ளாக்குவது,அவனின் கிண்டல்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளுதல் போன்றவையே எண்ணளவில் விபச்சாரத்தனமாகும்.
..
சிலபெண்கள் பன்னாட்டு மூலதனத்தின் வரவால் ஆடை குறைப்பிலும்,தினம் ஒரு ஆண் என்றபடி சுற்றுவது பெண்ணுரிமை அல்ல,இது மாறாக பெண்ணடிமைத்தனத்தின் மறு முகமாகும்.பெண்ணுரிமை என்பதின் முதல் படியே பெண்ணை பேசவிடுவதே.ஆனால் பேசவிடுதல் என்பது அடக்கப்பட்ட பெண்ணீடமும் சரி,பெண்ணுரிமை என்று ஊர் மேயும் சிலரிடமும் சரி இரண்டிடதிலும் மறுக்கப்படுகின்றது.
..
ஏனெனில் இந்த இரண்டுமே ஆணாதிக்கதின் வழிகாட்டுதல்களே. ஆணை கேள்விக்குள்ளாக்குவது என்பதே வாயாடி என வழக்கிலுள்ளது. பொறுக்கிகளுக்கு எப்போதும் விபச்சாரண் பட்டம் கிடைப்பதில்லை.ஓடிபோதல் என்பது ஒரு பெண் தான் விரும்பும் துணையை தெரிந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுவதனாலேயே நிகழ்கிறது.துணையை தெரிந்தெடுக்கும் உரிமையை பொறுத்தமட்டில் ஆணுக்கு வழங்கப்படும் உரிமையும்,மன்னிப்பும் பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. வாயாடி,விபச்சாரி போன்ற வினைச்சொற்கள் பெயர்சொற்களாக பெண்ணுக்கு வழங்கப்படுகின்றது. கற்பை காப்பதும்,பேச்சை குறைப்பதுமே பெண்மைக்கு இலக்கணமாக கூறப்படுகின்றது.
..
பாலின ரீதியில் எந்த வேறுபாடு இல்லாதபோதும் தாயாய்,சகோதரியாய்,மனைவியாக இருக்கும் பெண்ணை அடிமையாய் வைத்திருப்பதும் கலாச்சாரம் என்றும், ஒரு பெண் தானே விரும்பும் துணையை தெரிந்தெடுந்தெடுப்பதால் அக்கலாச்சாரம் அழியுமானால் அது ஒழிக்கப்படவேண்டிய கலாச்சாரமே!
..
பிச்சைக்காரனா ருந்தலும் கவுண்டனுக்குதான் கட்டிக்கொடுப்பேன்.வேற சாதிக்காரனுக்கு கட்டிக்கொடுக்கமாட்டேன் என்ற சின்னசாமியின் வார்த்தைகள் பார்ப்பனீயத்தின் வாயிலில் இருந்து உரத்து கேட்கின்றன.நீ ஒருபொருள்,நான் எதிர்பார்ப்பதை நீ தர வேண்டும்,உனக்கென தனி உரிமை கிடையது, உன்னை உருவாக்கிய எனக்கு அழிக்கவும் உரிமை உண்டு.இதையேதான் முதலாளித்துவமும் சொல்கிறது "இது என்னுடைய நிறுவனம் இங்கு யார் வேலை செய்யவேண்டுமென்பதை நான் தான் முடிவு செய்வேன்".என் மூலதனத்தில் நீ கேள்வி கேட்க உரிமை இல்லை.
..
------------------------------------------------------------------------------------------------
2020-ல் வல்லரசாக போகும் இந்தியாவின் தூண்களில் ஒருவனான சங்கர்,இந்தியா எதில் வல்லரசாகும் என்பதை தெள்ள தெளிவாக நிரூபித்திருக்கிறான்..சங்கர் வேலை செய்து வந்த ஆபீஸ் டைகர் என்ற அந்த நிறுவனத்தில் அய்ந்திலக்க சம்பளம் வாங்கும் வேலை அதிகம் செய்யாத பலரில் அவனும் ஒருவன்.
..
அவனுடைய நண்பர்கள் சொல்கிறார்கள்"எப்போதும் கலகலவென இருப்பான்,முகந்தெரியாத ஒருவனுக்கு ஆயிரக்கணக்கில் உதவி செய்தான்.அவனா இப்படி? கோபம் மனிதனை ஆட்டுவிக்கிறது.
..
அவர்களின் கேள்வியில் உயிரில்லாததை போலவே அவர்கள் சங்கரின் மேல் கொண்ட நட்பிலும் உயிரிருக்கவில்லை.
..
எங்கெல்ஸ்,காரல்மார்க்ஸ்-ன் நட்பு மக்கள் நலனைஅடிப்படையாக கொண்டது.கோடீசுவரனாகப் பிறந்திருந்தாலும் நட்பிற்காக,கொண்ட அரசியலுக்காக போராடினாரே எங்கெல்ஸ் அவருடைய நட்பை போன்றதல்ல இவர்களுடையது.அலுவலகத்தில் வேலை செய்வதால் என் நண்பன்,ஒன்றாக சாப்பிடுவதால் என் நண்பன்,வேலை முடிந்து நடந்து போகும் போது பேசிக்கொண்டு செல்வதால் என் நண்பன் தோசை,சாராயம் வாங்கித்தந்தால்என் நண்பன் இப்படி விபச்சார சந்தையாக மாற்றப்பட்ட இதனை நட்பு என்றே அழைக்கக்கூடாது.
..
ஒன்றரை வருடங்களாக நண்பர்களாயிருக்கிறார்களெனில் அவர்கள் எதைத்தான் பேசினார்கள்?பேசிக்கொண்டிருக்கிறார்கள்."பெண்களை கிண்டலடிப்பது,ஆபாசக்கதைகள் பேசுவது,தரக்குறைவாக நண்பர்களை பேசுவது"என்பதை தவிர வேறு எங்கேயும் போயிருக்காது.சொந்த அப்பனாகவேயிருந்தாலும் அரசியல் பேசினால் தான் அவரின் உண்மையன எண்ணத்தை புரிந்துகொள்ளமுடியும்.
..
சாதிவெறி பிடித்தமிருகத்தினால் கண்டிப்பாக நல்ல எண்ணங்களை கொண்டிருக்கமுடியது.அதற்கு தன் முகத்தை காட்ட வேண்டிய அவசியம் அலுவலகதத்தில் இல்லை,வாய்ப்பு கிட்டியிருந்தால் அங்கேயும் சரியாகவே பயன்படுத்தியிருப்பான்.சங்கரின் தனிப்பட்ட சூழ்நிலை காரணம் என கூற முடியாது.சாதி,மதக்கலவரங்களில் கொலை வெறியில் ஈடுபட்டபாசிஸ்டுகளுக்கும் சாதி,மதச்சூழல் தான் எனக்கூறி நியாயப்படுத்த முடியாது.
..
தனது அக்கா ஒடிப்போனதால் கோபம் வந்து கொலை செய்தானெனில்,தன் அக்காவின் தேவையை நிறைவேற்றாத அப்பன் மீதும்,மக்களின் வாழ்வை சீரழித்த இந்த அரசின் மேல் ஏன் கோபம் வரவில்லை.அவன் செய்த கொலைக்கு காரணம் கோபமல்ல ஆணாதிக்கம் தான்...............
..
சிலர் சொல்வது போல் கோபம் வந்தால் என்ன செய்வானென்பது தெரியாது என்பதையும் ஏற்க முடியாது,ஏனெனில் மனம் என்பது ஒரு உறுப்பல்ல.கை,கால்,கண் போன்றவை இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற செயல் முறையின் அடிப்படையை கொண்டது.மனம் என்பது மூளையின் சிந்திக்கும் பகுதி அதை நாம் தான் வளர்த்தெடுக்கவேண்டும்.சாலையில் பெண்ணைப்பார்த்து கிண்டலடிப்பதனாலும்,அலுவலகத்தில் மணிக்கணக்கில்வழிவதனாலும்.ஊர் மேய்வதாலும் மட்டும் ஆணாதிக்க சிந்தனை ஒழியது மாறாக ஊக்குவிக்கவேப்படும்.கை நிறைய சம்பளம் வாங்கினாலும் சங்கம் வைக்க அனுமதி இல்லாத ஐ.டி துறையில் அரசியல் பேசவேண்டிய வாய்ப்பு ஏற்படவில்லை.அதனால் தான் எதிரியை அறிக என்பதற்கு அர்த்தமும் புரியவில்லை.சாதி வெறி பிடித நாயுடன் நண்பர்களாயிருந்திருக்கிறோமென்ற குற்றவுணர்ச்சி ஏற்படவில்லை இனியும் ஏற்படபோவதில்லை தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் வரை.
..
------------------------------------------------------------------------------------------------
இந்த சமூகத்தில் நாகரீக வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்,சாதீய பெண்ணடிமை கட்டுமானங்களை கொண்டதாகவே இருக்கிறது.சீர்திருத்தங்களால் மயிரளவும் பிளக்க முடியாத கட்டுமானத்தை வர்க்கப்போராட்டம் என்ற எரிமலையால் மட்டுமே உடைக்கமுடியும்.

Wednesday, November 21, 2007

நந்திகிராம் சி.பி.ஐ.(எம்) குண்டர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் !

Tuesday, November 20, 2007

கொள்ளைக்குக் காவல் ஏன்?


நல்ல மருத்துவ வசதிகளாகட்டும் அல்லது மருத்துவப் படிப்பாகட்டும், அவை என்றுமே காசு உள்ளவருக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. சமீபத்தில் கூட சென்னைக்கு அருகில் கெளம்பாக்கத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையுடன் புதிதாக ஒரு மருத்துவ நகரையே உருவாக்கியுள்ளனர் செட்டிநாட்டு ராஜ பரம்பரையினர். 100 மைல் பரபளவில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த நகரைக் கருணாநிதி திறந்து வைத்துள்ளார். இந்த மருத்துவ நகரை இவர்கள், ஏதோ ஏழைகளுக்குச் சேவை செய்வதற்காகக் கட்டியது போல கருணாநிதி பேசியுள்ளார்.

நோயாளிகளைக் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவும், மருத்துவம் படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையடித்துக் கோடி கோடியாகச் சம்பாரிக்கவுமே இந்த நகரை இவர்கள் கட்டியுள்ளனர். இதே மருத்துவக் கல்லூரி அண்ணாப் பல்கலைக் கழகம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுக் குறைந்த கட்டணத்தில் படிக்க வந்த மாணவகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் தாங்கள் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டுதான் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் கல்வி வள்ளல் பட்டம் வேறு.


தரமான கல்வியையும், மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட இந்த அரசு அந்தப் பொறுப்பை இந்தக் கொள்ளைக் கும்பலிடம் கொடுத்துள்ளது. இதே மேடையில் கருணாநிதி பேசுகிறார், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை அரசால் தர முடியாதாம் ஆதலால் இது போன்ற தனியார் நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முன் வர வேண்டுமாம். பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகத் திருடனிடமே காவல் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

Monday, November 19, 2007

சாட்டை இங்கே ராமதாஸ் எங்கே ?

ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:

1. நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!

2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!

3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!

4.எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் - எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!

5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டாள் - இது சத்தியம்! என் தாய்மீது சத்தியம்!

இதையெல்லாம் உங்கள் டையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!


இந்த சத்தியங்களை மிஞ்சும் வகையில் ராமதாஸ், இன்று ஓட்டுப்பொறுக்கி கட்சியாகவும், குடும்ப அரசியல்வாதியாகவும் ஆனது மட்டுமல்ல, போராட்டம் என்ற பெயரில் பணம் கொழுக்கும் பெரிய NGO ஆக மாறி மக்களை ஏமாற்றி வருகிறார்.


இவரையும், இவரைப் போல ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வருகின்ற விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடைகள் ஆனாலும் சரி இவர்கள் ஆரம்பகட்ட வாழ்க்கை , பேசிய பேச்சுக்களை என்ன வென்று சற்று புரட்டினாலும் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் என.

Related:

Friday, November 9, 2007

ஆட்சியாளர்களை மாற்றினால் அரசை மாற்ற முடியுமா?

 • சிறப்பு பொருளாதார மண்டலம் நாட்டோடு 'வளர்ச்சி' க்கு என்று சொல்லி ஜெட் வேகத்தில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை சுட்டு கொல்லுகின்றனர்.

 • கோடிக்கணக்கான மக்கள் இறுதிக்கட்ட வாழ்வாதாரமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட சில்லறை வணிகத்தில் இன்று ரிலையண்ஸ், டாடா, வால்மார்ட் போன்ற பெரிய கம்பெனிகளை அனுமதித்து அவர்களை குப்பைத்தொட்டியில் வீசுவது போல வீசுகின்றனர்.
 • 5 லட்சம் கோடிக்கு அணுசக்தி ஒப்பந்தம் என்கிற வழியில் அடிமைசரத்துகளுடன் வெளிப்படையாக தெரியக் கூடிய 123 ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கின்றனர். இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்தாக வரும் இதனை கடந்த BJP ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவேற்றக்கூடிய நிலையில் வந்துவிட்டார்கள்.
  அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' , பாதுகாப்பு உணர்வுடைய நாட்டிலேயே 2 1/2 சதவீதம் தான் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் உள்ளது, ஆனால் இவர்கள் நம்ம நாட்டில் இருக்கின்ற 3 சதவீதத்தை 7 ஆக மாற்ற போகின்றனராம். அதுவும் 2020-ல் தான் கிடைக்குமாம். ஆனால் நம் நாட்டிலே அதிகமாக உள்ள தோரியத்தை செறிவூட்டி மின்சாரம் கிடைக்க செய்வதில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதில் வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் மின்சாரத்தை பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று உடனடியாக 123 இல்லைன்னா நாடே இருட்டாகி விடும் என்கிற சூழ்நிலையும் இல்லை என்ற இரண்டு அம்சங்களையும் தவிர்த்து விட்டு கூட பார்ப்போம்.
  3 யை 7 ஆக மாத்துவதை அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' நாட்டில் செய்வதற்கே அந்நாட்டு மக்கள் ஒத்துக்குறது இல்லைங்கிற சூழ்நிலையில் அதை இந்தியா போன்ற ஏழை நாட்டில், பாதுக்காப்பு உணர்வுணா என்னவென்று தெரியாத நிலையில் ஆகப் பெரும்பாண்மை மக்களை வைத்து உள்ள நாட்டில் கொண்டு வரப்போறேன் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம். உலகம் முழுவதும் விலை போகாத இந்த உலைகள் மூலம் 5 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் விடுவார்களா.
  இது வெறும் 3 T0 7 என்கின்ற விஷயத்துக்கும் மட்டும். ஆனால் இவர்கள் சொல்கின்ற இராணுவ ஒப்பந்தத்தை எடுத்து கொண்டால் அதில் இருக்கின்ற அடிமைச் சரத்துகளை பற்றி நினைத்துப்பார்க்க கூட முடியாத அளவுக்கு, வெளிப்படையாகவே இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில் உருவாக்கி உள்ளார்கள்.

 • அடுத்து நாட்டுல 83 கோடி பேருக்கு தினமும் ரூ20 சம்பளம் என்கிற லட்சணத்தில் ஆக்கிபுட்டு இவர்கள் சொல்கின்ற GTP 9 சதவிதம், பங்குசந்தை 20,000 புள்ளிகளை தாண்டி பறக்கிறது போன்றவை. ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி என்கிற ஒருத்தன் 2 1/2 லட்சம் கோடியை கொள்ளையடிக்க செய்து உலகின் நம்பர் ஒன் பணக்காரனாக்க தாங்கள் செய்த சாதனையும் சொல்லி 'நாடு வளர்ச்சி' அடைகிறது என்கிறார்கள்


இப்ப மேலே சொல்லியிருக்கின்ற சிறப்பு பொருளாதார மண்டலம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை- தரகுமுதலாளிகளை அனுமதிப்பது, அமெரிக்க - இந்தியா இராணுவ ஒப்பந்தம் & 123 அக்ரிமெண்ட், தேசிய வளர்ச்சி என்கிற மோசடி பற்றி எல்லா ஆட்சியாளர்கள் ஓட்டுப்பொறுக்கிகள் என்ன கருதுகின்றனர். ஒன்று மின்சாரம் தேவை, வேலைவாய்ப்பு என்ற இரண்டு வார்த்தை கொண்டு சத்த்த்த்த்த்ததததததமாககககககக ஆதரவு குரல் அல்லது மெளனம் இது இரண்டும் தான் பதிலாக வருகிறது.இதனை கொண்டு தான் பதிவின் தலைப்பை விளக்க போகிறோம்.


ஆதரவு குரலில் இரண்டு வகையாக இருக்கின்றனர். ஒன்று ஆட்சியில் இருந்தவர்கள் -இருக்கின்றவர்களுடைய நேரடி ஆதரவு. மற்றொன்று கூட்டணி சுகத்தில் இருந்தவர்கள் - இருக்கின்றவர்களுடைய மறைமுக ஆதரவு. இந்த இரண்டு பேருக்கும் மேலே உள்ள விசயங்களை பற்றி தெட்ட தெளிவாக தெரியும். இதுவரை ஆட்சிக்கு வராதவர்களுக்கும் , விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடை அரசியல் வாதிகளுக்கும் மட்டும் தான் இதை பற்றி தெரியாது.


அப்ப எதிர்ப்பு என்பதை பேசாத, அரை-குறையாக பேசுவது மாதிரி, தெரியாது என்கிற இந்த லிஸ்டை விரிவாக பார்த்தா புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். இதுல முக்கியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டியது இதில் பேசாத, அரை-குறை பேசுவது மாதிரி இரண்டு பேருமே ஜான் பெர்க்கின்ஸ் (பொருளாதார அடியாள்) வரைக்கும் தெரிந்த ஆட்சியாளர்கள், பழம் தின்னவர்கள். என்ன வித்தியாசம் என்றால் கொட்டை போட்டவர், போடாதவர் என்பதுதான்.


முதல வருகிறவர்களை பார்ப்போம், பல்லாயிரக்கணக்கான கோடியினை இப்படி நாட்டை விற்க துணைபோய் சம்பாதித்த இவர்கள் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. எப்படி பேசுவார்கள் என்றால் நாடு வளர்ச்சியடைகிறது, போய்கொண்டு இருக்கிறது, இளைஞர்களே தியாகம் செய்ய வாருங்கள், ஒளிர்கிறது இந்தியா, தீவிரவாதத்தை நாங்கள் அடக்கியது போல இவர்கள் அடக்குவது இல்லை என்று ஆளே இல்லாத மேடையில் பேசுவது போல பேட்டி கொடுப்பார்கள். என்னா இப்ப இவர்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் 100% பிழைப்புவாதிகள்.

இந்த லிஸ்டில் IMF மண்மோகன், ENGLAND சோனியா, கலவர நாயகன் அத்வானி, எட்டப்பன் வாஜ்பாய், பன்னாட்டு நிறுவன வக்கில் சிதம்பரம் & சன், திமுக டிரஸ்ட் ஓனர் , அம்மா டிரஸ்ட் ஓனரம்மா , ஊழல் லாலு, ஹெரிடேஜ் சந்திரபாபு, இன்னும் காங்கிரஸ் அரச பரம்பரை, பா ஜ க அன் கோ வை சேர்ந்த ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


அடுத்து இரண்டாவதாக முழுமையாக நாட்டை விற்று கொள்ளையடிக்காதவர்கள், கூட்டணி சுகத்தில் மட்டும், சிலர் சில மாநிலங்களில் ஆட்சி என இருக்கின்றவர்கள். இவர்களிலும் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. இவர்கள் எப்படி பேசுவார்கள் என்றால் "ஆகக அதெல்லாம் முடியாது", மாற்றுங்க இதை, தள்ளி வைங்க இதை, மக்களே இவர்கள் கொள்கையினை நாம் எதிர்த்து போராடனும், துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாதது, நக்சல் சதி, நாடு தழுவிய போராட்டம், நீதியின் குரல் ஒலிக்கட்டும், மக்கள் புரட்சி வெடிக்கட்டும், தமிழ்நாடு 2020 ( இந்தியா 2020 வீட்டுக்குப் போன பின்) என்றும் முக்கியமாக எங்களால் "இவர்கள் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றும் அடிக்கடி பேட்டியும். அறிவிப்புகளும் செய்வார்கள்.


என்னா இப்ப இவர்கள் கட்சியில் பிழைப்புவாதிகளும், சரியான கட்சி என நம்பி சிலரும் இருக்கின்றனர்.தெரியாதவர்களுக்கு தெரியவரும் போது சிலர் சரியான புரட்சிக்கர அரசியலுக்கு வருகின்றனர் அல்லது அதே பிழைப்புவாத அரசியலில் மூழ்கிவிடுகின்றனர்.


இந்த லிஸ்டில் போலிக் கம்யூனிஸ்டுகள், ராமதாஸ் குடும்பம், அரசியல் அசிங்கம் வைகோ,வாழும் அம்பேத்கார் திருமா, மாயாவதி மாமி............ போன்றவர்கள் இருக்கிறார்கள்.


அடுத்து மூன்றாவதாக பணம் மற்றும் சாதி அடிப்படையில் கட்சி ஆரம்பித்து இன்னும் ஆட்சிக்கே வராதவர்கள், கழிசடையாக இருந்து சொத்து சேர்த்ததை வைத்து கட்சி உருவாக்கி எம்.ஜி.ஆர் போன்ற பேண்டஸி அரசியலை மட்டும் வைத்தே இன்றும் மக்களை மடையர்களாக்க களத்தில் இறங்கி இருப்பவர்கள். மேலே இருக்கின்ற விஷயத்துக்கே போக மாட்டார்கள்.

இவர்கள் பேச்சு எப்படி இருக்கும் என்றால் 'ஜிபூம்பா' ஸ்டையில இந்தியாவை மாத்திடலாம் என்பதும், நாங்க வந்தா திருந்திடும் என்பதும் தான். எப்படி இப்படி கேணத்தனமாக யோசிக்கிறார்கள் என்கிறீர்களா, அடிப்படையே எதுவும் தெரியாது என்கிற காரணம்தான்.


இந்த லிஸ்டில் கார்த்திக் தேவர், கருப்பு காவி விஜயகாந்த், சமத்துவ நாடார் சரத்குமார், புதிய நீதிக் கட்சி சங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள்.


இந்த மூன்று லிஸ்டில் இரண்டாவதாக நீதி, போராட்டம் என்கிறவர்கள் ஒரு கட்டத்தில் சொத்து பல்லாயிரத்தை தாண்டியதும் அதாவது ஆட்சியினை முழுமையாக அனுபவிச்ச பிறகு முதல் லிஸ்டில் இருக்கின்றவர்கள் மாதிரி மாறிவிடுகிறார்கள்.


மூன்றாவதாக எதுவும் விஷயம் தெரியாமல் இருந்தவர்கள் வளர்ச்சியடையந்த உடன் 'ஜிபூம்பா' இனி பலிக்காது என்று இரண்டாவது லிஸ்டில் இருக்கின்றவர்களுடைய நீதி, போராட்டம், தமிழ் என தங்கள் பாதையினை மாற்றி கொள்கின்றனர்.


இப்படி எல்லா ஓட்டுக் கட்சிகளையும் இந்த மூன்று லிஸ்டில் முழுவதும் வகைப்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். மக்களுக்கான எதையுமே இவர்கள் செய்வதும் இல்லை, செய்யவும் முடியாது. ஏனென்றால் இந்த அமைப்பே தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த லிஸ்டில் உள்ள யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் செயல்படுவது இந்தப் தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்குத்தான்.


அப்ப இந்த அமைப்பில் ஆட்சியாளர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் இருக்கக்கூடிய இந்த அமைப்பையே தூக்கியெரிய வேண்டும், அப்போதுதான் பெரும்பான்மையான மக்களின் நலன்கொண்ட ஒரு அரசை அமைக்கமுடியும்.

Wednesday, November 7, 2007

"புரட்சியைக் காக்க உயிர் வழங்கிய ருஷ்யாவின் தொழிலாளர்களுக்கும் குடியானவர்களுக்கும்""விதியை முடிக்கும் போரில் வீழ்ந்தீர் நீர்
மக்கள் விடுதலைக்காக, மக்கள் மானத்திற்காக.
உயிர்களையும் அன்புக்குரியவை அனைத்தையும் வழங்கினீர்.

நீங்கள் துறந்த உயிரின் மதிக்கப் பெறும் காலம் வரும்.
அந்தக் காலம் நெருங்கி விட்டது:
கொடுங்கோண்மை வீழும், மக்கள் எழுவர்.
மாண்பும் விடுதலையும் பெற்று.

செல்க சோதரரே, சான்ற வழியைத் தேர்ந்தீர் நீர்.
உங்கள் கல்லறையில் சபதம் ஏற்கிறோம்,
விடுதலைக்காகவும்
மக்களின் இன்பத்துக்காகவும்
போர் புரிவோம் என்று."


Monday, October 8, 2007

'தவறு செய்த தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம்' -- உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

குஜராத் அம்புஜா சிமெண்ட் கம்பெனியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கச் சொல்லி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்தான் இப்படிக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு (சும்மா பேச்சுக்குக்காவது) என்பதை கேலிக்குள்ளாக்குகிறது இந்தத் தீர்ப்பு. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கையான இடஒதுக்கீடு, மக்கள்தொகையில் மிகவும் அற்பமான பார்ப்பன மேல்சாதியர்களின் விருப்பத்திற்கிணங்க தடை செய்யப்பட்டது. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மைத் தமிழர்களின் ஆதரவோடு நடைபெற்ற வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டது.

பல லட்சம் டில்லி சிறு வணிகர்களைக் காலி செய்ய வைத்துத் தனது மகன்களுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டித் தர ஒரு நயவஞ்சக உத்தரவைப் பிறப்பித்து அதனை நிறைவேற்ற நாட்டின் இராணுவத்தையே ஒரு நீதிபதி பயன்படுத்தியதும் இங்கேதான்.

பல லட்சம் வழக்குகள் கிடப்பில் கிடக்க, பல்லாயிரம் மக்கள் குற்றாவாளிகளா இல்லையா என்றே தெரியாமல் வருடக் கணக்கில் சிறையில் கிடக்க, கோடீஸ்வரர்களுக்காகவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்காகவும், உயர் ஜாதியினருக்காகவும் விடுமுறை நாட்களில், நள்ளிரவில் கூட கடைதிறந்துத் தீர்ப்பை வியாபாரம் செய்வதும் இங்கேதான்.
இது மட்டுமல்ல கூலி உயர்வு கேட்டுப் போராடினால் சிறை, கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கேட்டுப் போராடினால் சிறை, வேலையை நிரந்தரமாக்கக் கோரினால் சிறை எனப் போராடுபவர்களை, தொழிலாளர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை, மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களைச் சட்டப்பூர்வமாக நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதும் இங்கேதான்.

இன்றைக்குத் தொழிலாளர்களை மனிதனாகக் கூட மதிக்காமல் ஒரு பாசிசத் தீர்ப்பை வழங்கிய இதே நீதி நீதிமன்றம் தான், பாசிச ஜெயலலிதா தனது மனசாட்சிப் படி தண்டனை வழங்கிக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.

பதவியிடம் தாழ்ந்து, பணத்திடம் தாழ்ந்து, உயர் ஜாதித் திமிரிடம் தாழ்ந்து, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களிடம் மேலும் தாழ்ந்து, சொறி நாயினும் கேவலமாக நாறிய போதும், உழைக்கும் மக்கள் மீது மட்டும் வெறிநாயாகப் பாய்கிறது இதன் சட்டங்கள்.

இதன் அக்கிரமங்களைப் பொறுத்துக் கொண்டே போனால், மக்களின் அந்தப் பொறுமையை மேலும் சோதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு, பார்ப்பன, உயர் ஜாதிகளுக்குத் தான் ஓர் அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

இன்றைக்குத் தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம் என்று தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளட்டும். நாளைக்கு இவர்கள் தொழிலாளர்களின் கருணைக்காக ஏங்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் இவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதுதான் அது.

Sunday, October 7, 2007

"நாட்டைக் காவியாக்குவதும் காலனியாக்குவதுமே எங்கள் கொள்கை"

Related:
..
உயர் நீதி மன்றம் அல்ல வேதாந்தி மன்றம் !
இராமன்: தேசிய நாயகனா தேசிய வில்லனா?
..

Tuesday, October 2, 2007

தாமரை டிவியின் "நேருக்கு நேர்" நிகழ்ச்சி - கலந்து கொள்பவர்கள்: ராமன் (அயோத்தி,உ.பி.) மற்றும் கிருஷ்ணன்(மதுரா,உ.பி.)

கிருஷ்ணன்: அடடே ராமனா! என்னப்பா இது..கப்பலே கவுந்திட்ட மாதிரி கன்னத்துல கைவச்சிக்கிட்டு உக்காந்திட்டே..

ராமன்: ஒனக்கு விசயமே தெரியாதா? நான் கட்டின பாலத்தை இடிக்கப்போறாங்களாம். பின்னே கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? சொல்லு.

கிருஷ்ணன்: நீ எப்ப பாலம் கட்டினே? கொஞ்சம் வெவரமா சொல்லு.

ராமன்: சீதையை நான் மீட்டு வருவதற்காக பாலம் கட்டினேனே!

கிருஷ்ணன்: என்னது? சீதையை மீட்கவா? ஒன் பொண்டாட்டி எங்கே போனா?

ராமன்: எப்பா! அது இப்போ பிரச்சினை இல்லை..பாலத்தை ஒடைக்கப் போறதுதான் பிரச்சினை..அதப்பத்தி பேசு.

கிருஷ்ணன்: அது கிடக்கட்டும் கழுதை.. சொல்லுப்பா..ஒன் பொண்டாட்டி எங்க போயிட்டா?

ராமன்: சும்மா அதையே நோண்டிக்கிட்டிருக்காத..ராவணன் கூடத்தான் போனாள். கடல் தாண்டி இலங்கையிலே இருந்த அவளை மீட்டுவரத்தான் பாலம் கட்டினேன்.

கிருஷ்ணன்: சரி..போவுதுன்னு விட்டுத்தள்ளியிருக்க வேண்டியதுதானே! என்ன எளவுக்குப் போய் கூட்டிட்டு வரணும்? சரி.. நீ அங்கே போறதுக்கு முன்னாடி அங்க பாலம் இருந்திருக்காதே? அப்பறம் எப்பிடி சீதையும் ராவணனும் இலங்கைக்குப் போனாங்க?

ராமன்: ராவணன் எல்லாம் அசுரனாச்சே..அவன் சீதையை இடுப்புல வச்சிக்கிட்டு பறந்து போயிட்டான்.

கிருஷ்ணன்: ஓகோ..அப்படியா! உன்கிட்டதான் 'எல்லை தாண்டிய பயங்கரவாதி' ஒருத்தன் கெடந்தானே..அனுமான். அவனைப் பறந்து போய் சீதையைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமுல்ல...

ராமன்: ஏனோ அப்ப எனக்கு இது தெரியல.. அதான் பாலம் கட்டி போக வேண்டியதாச்சுது. இப்ப பாரு.. அந்தப் பாலத்தையும் இடிக்கப்போறாங்களாம்.
கிருஷ்ணன்: பாலம் இப்போ அங்க இருக்கா?

ராமன்: இல்ல.. அது தண்ணிக்குள்ள முங்கிருச்சு..

கிருஷ்ணன்: என்னய்யா நீ.. நீ கட்டுன பொண்டாட்டியோட ஒழுங்கா வாழ முடியல...நீ கட்டின பாலம் தண்ணில போயிருச்சு..ஒன் கோயில சாதாரண மன்னன் பாபரு இடிச்சிட்டான்... அப்ப என்ன மயித்துல நீ அவதாரம்னு சொல்றானுங்கன்னும் புரியல்...கழுத கிடக்கட்டும்... பாலம்தான் தண்ணில முங்கிடுச்சே...விட்டுத்தொலைக்க வேண்டியதுதானே.. அதனால எதாச்சும் பிரயோசனம் இருக்கா?

ராமன்: அது இருந்ததாலேதான் பல முனிவர்களும் ரிஷிகளும் அது மேல 15ஆம் நூற்றாண்டு வரைக்கும் இலங்கைக்குப் போனாங்க..அப்புறம் தண்ணில முங்கினாலும்...இன்னைக்கு அதை வச்சுதான் பிஜேபின்னு ஒரு கட்சி உயிர் பிழைக்க வேண்டிருக்கு..

கிருஷ்ணன்: கூமுட்ட மாதிரி உளராதே...15ஆம் நூற்றாண்டு வரைக்கும் அது இருந்துச்சுன்னா..என்னத்துக்குடா ராஜராஜ சோழன் கப்பற்படையை ஏவி ஈழத்தைப் பிடிச்சான்? பொடி நடையாப் போயி ராவி இருக்கலாமே!

ராமன்: அப்பிடில்லாம் நாஸ்திகமாப் பேசாதே.. அது இந்துக்களோட நம்பிக்கை!
கிருஷ்ணன்: என்னது இந்துவா? அப்பிடின்னா என்னது? நம்ம 2 பேரோட அவதாரத்திலெ இந்த பேரை எங்கயாச்சும் கேட்டிருக்கயா?

ராமன்: அதெல்லாம் தெரியாது..வெள்ளைக்காரன் குடுத்த பேரு அது.

கிருஷ்ணன்: வெள்ளைக்காரனா? யாரு..வெள்ளையா இருப்பானே அந்தப் பலராமனா?

ராமன்: அவன் இல்ல..இது நம்மளல்லாம் விட பலசாலி இங்கிலாந்துக் காரன்..
..
கிருஷ்ணன்: என்ன இழவோ கிடக்கட்டும்...விசயத்துக்கு வருவோம்..தண்ணில முங்கின பாலத்தை இடிச்சா என்ன? பேர்த்தா என்ன?

ராமன்: அது எப்பிடி? அங்கே 1000 வருசத்துக்கு பயன்படும் தோரியம் இருக்குதே!

கிருஷ்ணன்: ஓகோ..அப்பிடின்னா பேர்த்து தோரியத்த எடுத்தாலாவது பிரயோசனப்படுமே!

ராமன்: இல்ல..இல்ல.. நோண்டுனா தோரியம் கரஞ்சிடும்..

கிருஷ்ணன்: லூசு மாதிரி பேசாதே...கரஞ்சு போக அது என்ன கருப்பட்டி மிட்டாயா? அல்லது...பேர்க்காமலே தோரியத்தை நோண்டி எடுக்க அது என்ன புளியங்கொட்டையா? எந்தக் கூமுட்டப் பயலுக இப்பிடி ஒன்கிட்ட சொன்னாங்க?

ராமன்: விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கதான் சொல்றாங்க! தோரியத்தை நாம் எடுத்து வல்லரசாகிடக்கூடாதுன்னு அமெரிக்கா சதி பண்ணிதான் பாலத்தை ஒடைக்க சதி பண்ணுதுன்னு போன வாரம் சொல்லிருக்காங்க!

கிருஷ்ணன்: நீயும் அந்தப் பரதேசிப்பயலுக சொல்றத நம்பிக்கிட்டுக் கிடக்கே! ஏண்டா..அமெரிக்காவுல இருந்து டாலர் டாலரா நன்கொடை வாங்குற நாதாரிங்க 'அமெரிக்க எதிர்ப்பு' வேசம் கெட்டுறானுங்கன்னா அத நீயும் நம்புற..ஒன்னயும் போயி எங்க கூட அவதாரத்தில சேத்துருக்காங்களே அவங்களச் சொல்லணும்! ஆமா! தனுஷ்கோடியில இருந்து மன்னார் வரை பாலம் போட்டீங்களே! மண்டபத்தில இருந்து ராமேஸ்வரம் போறதுக்கு என்ன பண்ணுனீங்க?

அது கிடக்கட்டும்! உன்னை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.. பாலம் கட்ட ராமநாதபுரம் ஜில்லாவுக்கு போனப்போ அங்கே தமிழ் பேசுனவுங்களோட நீ எப்படி பேச முடிஞ்சுது? ஒனக்கு சமஸ்கிருதம் மட்டுந்தானே தெரியும்? யார் ஒனக்கு துவிபாஷி வேலை பார்த்தாங்க? அந்த ஜில்லாவுலே எங்கேயும் பாறை கிடையாதே..பாலம் கட்ட என்னடா பண்ணுனீங்க?

ராமன்: ??

கிருஷ்ணன்: பாலத்தக் கட்டி எத்தன வருசமாகுது?

ராமன்: பதினேழரை லட்சம் வருசமாகுது..

கிருஷ்ணன்: அப்படீன்னு யாரு சொன்னா?

ராமன்: ஜெயலலிதா..சே..சே..வால்மீகி..

கிருஷ்ணன்: ஆமா..5000 வருசத்துக்கு முன்னாடிதான் இந்தியாவிலேர்ந்து இலங்கைக்கு நடந்தே போக முடியுமே...கடல் மட்டம் தாழ்ந்துதானே கிடந்தது...அப்பறம் ஏன் பாலம் கட்டுனீங்க? நடந்தே போக முடியுற இடத்துக்கு பாலம் கட்டுனீன்னா ஒன்னை 'கூமுட்டப் பயல்'னு சொல்லாம வேறென்ன சொல்ல?

ராமன்: என்னைய மட்டும் இவ்வளவு நோண்டுறீயே! கண்ணகி மட்டும் உண்மையா? அவ மதுரைய எரிச்சது உண்மையா?

கிருஷ்ணன்: சோ ராமசாமி மாதிரி முட்டாத்தனமா உளராதே...யாராச்சும் கண்ணகி கக்கூசு கட்டுனா..வள்ளுவரு காலேஜ் கட்டுனாருன்னு சொன்னாங்களா? உன்னையத்தானே வச்சு குரங்குப்பயலுக ஊளை விடுராங்க... ஒன்னையப் பத்திதானடா பேசணும்...

ஒண்ணு சொல்றேன் கவனமாக் கேட்டுக்கோ...கூமுட்டப்பய ராமனே!

தமிழகத்திலே வாலாட்டாதேன்னு உன் வானரப்படையைச் சொல்லிவை! இல்லைன்னா ஒட்ட நறுக்கிடுவாக!

முக்கியமா வள் வள்னு குரைச்சிக்கிட்டுருக்கிற பிஜேபி காரனுக கிட்ட சொல்லிடு..."தமிழ்நாட்டுல போய் என்னத்தையாவது பண்ணிக் கழுதப்பெரட்டு பண்ணலாம்னு நினைக்க வேண்டாமின்னு"...

ஏன்னா அங்க, உன்னைய மாதிரி ஆள்களை ஒரு மனுசனாவே மதிக்கறதில்லங்கத மொதல்ல தெரிஞ்சுக்கோ... 'பிச்சை எடுக்குதாம் பெருமாளு'..'அதப் புடுங்குதாம் அனுமாரு'ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? அதில இருந்தே தெரியுதா உனக்கு என்ன மரியாதைய தமிழ்மக்கள் குடுக்கிறாங்கன்னு..

அதனால ரொம்ப வாலாட்டுனா..."அந்தா ஒரு கை இல்லாம போறான் பாரு..அவன்தான் இந்து முன்னணி"..."முன்னம்பல் பூரா பேந்து போகிறான் பாரு..அவன்தான் பிஜேபி".."ஒத்தக்கால வச்சிக்கிட்டு நொண்டுறானே..அவன்தான் விஷ்வ ஹிந்து பரிஷத்'னு சொல்லப் போறாங்க... உங்களில் ஊனமுற்றோர் ஜனத்தொகை தமிழ் நாட்டிலே அதிகமாகப் போகுது..அது மட்டும் நிச்சயம்..

அதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம்.. நான் சொல்றத சொல்லிட்டேன்..

(இந்த உரையாடலைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த கும்மாங்குத்துக்களை தாமரை டிவி சென்சார் செய்துவிட்டதால் மேல் விவரங்களை அறியமுடியவில்லை)

Sunday, September 30, 2007

ராமன் பாலம் - தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் இந்துமதவெறியர்கள்

குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக்கி இந்துமதவெறியாட்டம் போட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் தமிழ்நாட்டையும் குஜராத்தாக மாற்றிடத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். கலவரத்தைத் தூண்டிவிட அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள விசயம்தான் 'ராமன் கட்டிய பாலம்'. இந்து மதவெறிக்கும்பலின் இச்சதித் திட்டத்திற்கு கூட்டாளிகளாக காங்கிரசு,அதிமுக உட்பட பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகளும் இன்றைக்குக் கைகோர்த்து நிற்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்துமதவெறிப் பாசிசத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வரும் இந்தியாவில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை அதிவிரைவாக எடுத்துச் செல்வதற்கென்றே உருவாக்கப்படுபவைதான், துறைமுகங்களை உள்நாட்டுடன் இணைக்கும் நாற்கரச் சாலைகளும், சேதுக்கால்வாய் திட்டமும் என்பதனை நாம் ஏற்கெனெவே சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

அந்நியனுக்கு சேவை செய்ய என்றே உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டத்திற்காக 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே' என வெறிக்கூச்சல் போடுதன் மூலம், தமிழ்நாட்டை, குஜராத் போன்ற கலவரபூமியாக்க இந்து பாசிசக் கும்பல் பலமுனைகளிலும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

பாக் நீர்ச்சந்தியில் தற்போது ஆழப்படுத்தப்பட்டு வரும் பகுதியில் 'இந்துக்களின் புராதனச் சின்னமான இராமர் பாலத்தை இடிப்பதைத் தடுக்க வேண்டுமென'க் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில், ராமர் பாலம் எனும் பகுதியானது இயற்கையாக உருவான மணல் திட்டுதான் என்றும், ராமர்,ராமாயணக் கதாபாத்திரங்களுக்கும், ராமர்-ராவண யுத்தத்திற்கும் சான்றுகள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தது.

உடனே பாஜகவில் இருந்து விஷ்வ இந்து பரிசத் வரை இந்து பாசிசக் கும்பல் 'மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள், தெய்வ நிந்தனை; இந்துக்களின் மத நம்பிக்கை மீதான தாக்குதல்' என்றும் இதற்காக ஆளும்கட்சி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் கூச்சல் போட ஆரம்பித்தது.

மதவெறி மூடத்தனம், பாஜகவுக்கு மட்டும்தான் சொந்தமா? எனப் போட்டி போட்டுக்கொண்டு 'ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவித்து, சேதுக்கால்வாய் திட்டத்தில் இருந்து பாலத்தைக் காக்க வேண்டும்' என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றம் சென்றார், திராவிட இயக்கத்தின் புதிய பரிணாம வளர்ச்சியான, ஜெயலலிதா.

தொல்லியல் ஆய்வுத்துறை , அறிவியல்பூர்வமாகச் செயல்பட வேண்டிய தனது கடமையைச் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத பாசிஸ்ட் ஜெயலலிதாவோ 'ராமர் பாலத்தை இயற்கையாய் உருவானது என்று சொல்லியதன் மூலம் மதச்சார்பற்ற அரசு எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் தகுதியை மத்திய அரசு இழந்து விட்டதாக'த் திமிரோடு பேசினார். ராமர் பாலம் கட்டியதாகச் சொன்ன அண்டப்புளுகைத் தோலுரிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானதாம். மதச்சார்பின்மையின் அர்த்தத்தையே புரட்டிப்போடுகிறார், தன்னைப் 'பாப்பாத்தி' எனப் பெருமையோடு அறிவித்துக்கொண்ட இந்துமதவெறி ஜெயா.

இந்த எதிர்ப்புகளை சாக்காக வைத்து, ஒரே நாளில் காங்கிரசு அரசு பல்டி அடித்து, தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து ராமர் பற்றிய பகுதிகளைத் திரும்பப்பெற்றுக் கொண்டது. அறிக்கை தயாரித்த அதிகாரிகள் இருவரை இடை நீக்கம் செய்தது.

அத்துடன் நில்லாமல் காங்கிரசுக் கட்சி தனது சட்ட அமைச்சர் பரத்வாஜ் எனும் பார்ப்பனரின் வாயாலேயே "இமயமலை இமயமலைதான்.கங்கை கங்கைதான்.ராமர் ராமர்தான்.இதற்கெல்லாம் ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை.இந்துக்களின் வாழ்வில் ராமர் பிரிக்க முடியாத ஓர் அங்கம். இது விவாதிக்க வேண்டிய விசயமில்லை" என ஒரே போடாகப் போட்டு, தாமும் இந்து மதவெறிக் கட்சிதான் என்பதை நிரூபித்துள்ளது. காங்கிரசின் இந்து மதவெறி இப்படி அப்பட்டமாக வெளிப்பட்ட பின்னரும் கூட சிபிஎம்-மும், சிபிஐயும் இன்னமும் காங்கிரசுக் கயவாளிகளை மதச்சார்பற்ற சக்திகள் எனக் கூறிக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றன.

பாஜக,காங்கிரசு,அதிமுக வரிசையில் 'இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது' என்று தேமுதிகவும், புதிய கடை ஆரம்பித்து அரசியல் வியாபாரம் ஆரம்பித்திருக்கும் சரத்குமார், விஜய டி ராஜேந்தர் வரை அனைத்து கழிசடைகளும் இந்து மதவெறி சாக்கடையில் புரள ஆரம்பித்து விட்டனர். அதாவது பாலம் உருவான அறிவியல் உண்மையைக் கூறினால் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விடுமாம். பிற்போக்குவாதிகளான இவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் காம்ரேடுகளும் அதே கழிசடைச் சிந்தனையை வேறு வார்த்தைகளில் 'மத்திய அரசு அறிக்கையை திரும்பப்பெற்றது சரியான செயல்தான்' என்றும் 'பிரச்சினைக்கு சம்பந்தமில்லாமல் ராமர்,ராமாயணத்தை குறித்து எல்லாம் கருத்துத் தெரிவித்தது சரியல்ல' என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

அறிவியல்பூர்வமான சிந்தனையை வளர்த்தெடுத்து, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிவதே உண்மையான கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும். ஆனால் தொல்லியல்துறை அறிக்கையை எதிர்ப்பதன் மூலம், ராமர் பால மூடக்கதைக்குத் துணை போய், சிபிஎம்மும் மதவெறியைத்தாண் ஆதரிக்கின்றது. பின்னர் எதற்கு இவர்கள் இன்னமும் தங்கள் கட்சியின் பெயரில் கம்யூனிஸ்ட் எனும் வார்த்தையை ஒட்ட வைத்துள்ளார்கள்?

வட இந்தியா எங்கிலும் ராமர்-ஜென்ம பூமி, ரத யாத்திரை என்ற தந்திரங்கள் மூலம் தனது அடித்தளத்தை அமைத்துக்கொண்ட சங்க பரிவாரத்திற்கு தென்னிந்தியாவில் வேரூன்ற சரியான முகாந்திரத்தை ராமன் பாலம் கதை தந்திருக்கிறது. தமிழகத்தில் தனது இயக்கத்தைக் கட்டுவதில் சிரமம் இருக்கிறது என்பதை பிரவீண் தொகாதியாவே ஒத்துக்கொள்கிறார். அதற்காக வெகு நுட்பமாகத் திட்டமிட்டு மதவெறியைப் பரப்புவதில் சங்கபரிவாரம் முயற்சிக்கிறது.

எழுபதுகளில் இருந்து விவேகானந்தர் பாறை, மண்டைக்காடு கலவரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்ற தந்திரங்கள் மூலம் பையப் பைய வேர் பிடித்து வரும் இந்து மத வெறி கும்பல் ராமன் பாலம் சர்ச்சையைக் கிளறி விட்டு தமிழகத்தை இன்னொரு குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறது.

இதனைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்ல யாகங்கள், பூசைகள் செய்வதுடன் மக்களைத் திரட்டிப் போராடுவதும், நீதிமன்றங்கள் மூலம் பிரச்சாரம் என்று மும்முனைத் திட்டம் வகுத்து செயல்படுகிறது.
முன்னாள் தேர்தல் கமிசனர் கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சுந்தரம் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்து ராமர் பாலத்தைக் காக்க மாநாடுகள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல் என்று முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

இதற்காக தினசரி ஒரு புளுகை அவிழ்த்து விட்டு வருகிறார்கள். இலங்கையின் நிலப்பரப்பு குறுக்காக அமைந்திருப்பதால்தான் மன்னார் வளைகுடாவை சுனாமி தாக்கவில்லை எனும் அறிவியல் உண்மையை மறைத்து, 'ராமர் பாலம்தான் தென் தமிழகத்தை சுனாமியில் இருந்து காத்தது' என்று கதை அளந்தார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தால் அடுத்த 1000 வருசங்களுக்கு தேவைப்படும்-அங்கு புதைந்து கிடக்கும்- தோரியம் கரைந்து விடும் என அரைகுறை அறிவியலைக் கலந்து பிரச்சாரம் செய்தார்கள். அப்பகுதியில் தோரியம் இருப்பது உண்மையாகவே இருப்பினும், தோண்டாமலே தோரியத்தைப் பிரித்தெடுக்க இயலுமா? மேலும், கரைந்து போக, தோரியம் என்ன உப்பா,சர்க்கரையா?

தனது முட்டாள்தனமான கதைக்கு எதை வேண்டுமானாலும் பேசலாம் எனக் கருதிக்கொண்டு, தோரியக்கதையில் சர்வதேசப் பிரச்சினையையும் சேர்த்து பிரச்சாரம் செய்தார்கள். "இந்தியாவுக்கு தேவையான தோரியத்தை கிடைக்கவிடாமல் செய்ய ராமர் பாலத்தை இடிக்க அமெரிக்கா சதி செய்கிறது" என்று விஷ்வ இந்து பரிஷத் அமெரிக்க எதிர்ப்பு வேசம் கட்டிப் பார்த்தது.

அமெரிக்க சதி பற்றிப் பேசும் இவர்கள், சேதுக்கால்வாய்க்குள் அமெரிக்கக் கப்பல்கள் நுழையக்கூடாது என்று என்றைக்குமே போராடப் போவதில்லை. போராடுவது கிடக்கட்டும். நிமிட்ஸ் கப்பல் சென்னையில் நங்கூரம் பாய்ச்சி, கோடம்பாக்கத்துத் துணைநடிகைகளுடன் காமக்களியாட்டங்களில் ஈடுபட்ட அமெரிக்க வீரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்தபோது இந்த அமெரிக்க எதிர்ப்புப் போராளிகள் எங்கே புடுங்கிக் கொண்டிருந்தார்கள்?

இந்துமத வெறி பாஜகவால் ஆரம்பிக்கப்பட்டு, காங்கிரசால் முழுமையாக்கப்பட்டு உள்ள அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்ட்கள், தோரியத்தை கிடைக்கவிடாமல் அமெரிக்கா சதி செய்வதாகப் புளுகுகிறார்கள்.

'ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது' என்கிறார் இல.கணேசன்.இதே 'நம்பிக்கை' வாதத்தைத்தான் பாபர் மசூதி விவகாரத்திலும் சொன்னார்கள். பால்யவிவாகமும் நம்பிக்கைதான். உடன்கட்டை ஏறுதலும் நம்பிக்கைதான். தீண்டாமையும் இந்துக்களின் நம்பிக்கைதான். அவற்றை எல்லாம் எதிர்த்தால் இந்துக்களின் மனம் புண்படுமே என்று கருதி இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு சொறிந்து கொடுக்கவா முடியும்?

தமிழ்நாட்டில் தனது சதிச்செயலை அரங்கேற்ற போதுமான அடியாள் படை இல்லாததால் வேறு மாநிலங்களில் இருந்து இந்துமதவெறியர்களை இறக்குமதி செய்து மாநாடுகளை நடத்துகின்றனர். ராமர் பாலப் பாதுகாப்பு மாநாட்டுக்கென்று ஆந்திரத்திலிருந்து வந்த கும்பல் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி வந்தனர். ரயில்வே அதிகாரிகள் பயணச்சீட்டைக் கேட்டபோது "ராமர் பாலத்தைக் காக்கப்போகும் நாங்கள் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்?" எனக் கேட்டு ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் செய்தனர். உடனே ரயில்வே போலீசோ அவர்களிடம் சமாதானம் பேசி அடுத்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவர்களைப் பாதுகாப்பாய் ஏற்றி அனுப்பி வைத்தது. மத வெறியர்களுக்கு வால்பிடித்த ரயில்வே போலீசு, புறநகர் ரயில்கள் ரத்தானதைக் கண்டித்து அதே வாரத்தில் நியாயமாகப் போராடிய பயணிகளைக் கைது செய்து 18 மணி நேரம் சிறையில் அடைத்தது என்பதில் இருந்தே அரசு எவ்வாறெல்லாம் இந்துவெறிக்குத் துணைபோகின்றது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பாஜகவை விட்டு விலகி தனி அமைப்பு கண்ட உமாபாரதி தமிழ்நாட்டுக்குள் வந்து 'ராமர் பாலத்தைக் காக்கப் போராடும் தன்னை முடிந்தால் கருணாநிதி கைது செய்து பார்க்கட்டும்' என்று கொக்கரிக்கிறார். கருணாநிதியோ 'இதை எல்லாம் என் வாழ்நாளிலேயே காண வேண்டியிருக்கிறதே' எனப் புலம்புகிறார். அவரின் வீரம் என்ன என்பதை இல.கணேசனே 'பாஜக தயவு கருணாநிதிக்கு தேவைப்பட்டால் அவர் ராமர் பாலத்தை இடிக்க விடாமல் காப்பார்' என்று போட்டுடைக்கிறார்.

இன்று பெரியார், பகுத்தறிவு என்று அறிக்கை விடும் கருணாநிதி ஆறாண்டு பாஜக ஆட்சியின்போது அது நடைமுறைப்படுத்தி வந்த சோதிடக்கல்வி, மதவெறி கலந்த பாடத்திட்டம், குஜராத் படுகொலை என அனைத்து அராஜகத்திலும் மவுனப்பங்காளியாகச் செயல்பட்டவர்தான்.

திடீரென்று ராமர்பாலத்தைக் காக்கப் போவதாக பாஜக ஏன் பேச ஆரம்பிக்கின்றது? என்பதை அறிந்து கொள்ள, மூளையைக் கசக்க வேண்டியதில்லை. விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் வேதாந்தத்தின் "மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி ராமர் பாலம் இடிக்கப்படுமானால் வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்கப்படும்" எனும் அறிக்கையில் இதற்கான பதில் உள்ளது.

நடந்து முடிந்த உ.பி. தேர்தலில் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த பாஜகவுக்கு வரப்போகும் குஜராத் தேர்தலுக்கும், ஒருக்கால் இடதுசாரிகளால் மைய அரசு கவிழ்க்கப்பட்டு வரப்போவதாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்யக் கிடைத்த நல்வாய்ப்பாகவே ராமன்பாலம் அமைந்திருக்கிறது.

அரசியல் சாசனத்தின் 51ஏ பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டியது இந்தியக்குடிமகனின் கடமை என்று தெளிவாக்கப்பட்டிருப்பினும், அறிவியலுக்குப் புறம்பாக காங்கிரசு அரசு செயல்பட்டு அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்பட்டு இந்து மதவெறியைக் கிளறி இருக்கின்றது. ராமர் பாலம் விவகாரம் மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு, அது சம்பந்தமாய் அமைக்கப்பட்ட லிபரான் கமிசனின் ஆயுளை நீட்டிக்கொண்டே செல்வது, மும்பைப் படுகொலைகள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா கமிசனின் அறிக்கையை அமலாக்காமல் இருப்பது என அனைத்து விசயங்களிலும் பாஜக விற்கும், காங்கிரசுக்கும் கொஞ்சம் கூட வேறுபாடு கிடையாது. இந்து மதவெறி காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் போலி கம்யூனிஸ்ட்களும் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு அடியாள் வேலை செய்து வருகின்றனர்.

123 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அப்பட்டமாய் அம்பலமாகிப் போயுள்ளது காங்கிரசுக் கட்சி. அவ்வொப்பந்தத்தை எதிர்ப்பது போல நாடகமாடி வரும் பாஜகவும் இதில் அம்பலமாகியுள்ளது. மக்கள் மத்தியில் இவ்வொப்பந்தம் பேசும் பொருளாகி மறுகாலனியாக்கம் பற்றிய சர்ச்சை சூடுபிடித்து வரும் இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையை மக்கள் மறந்து, 'ராமன் பாலம் கட்டினானா? இல்லையா?' என்று அவர்களை விவாதிக்கவிட்டு அதில் கிளறப்படும் மதவெறியில் குளிர்காய காங்கிரசும்,பாஜகவும் மட்டுமன்றி சகல ஓட்டுக்கட்சிகளும் முயன்று வருகின்றன.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அம்பலப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், அமெரிக்க உளவாளியும், டங்கல் ஒப்பந்தத்தின் செயல் தலைவனாகச் செயல்பட்டவனுமான சுப்பிரமணிய சாமியால் ராமர் பாலப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதென்பது தற்செயலாக இருக்க முடியாது.

1990களின் ஆரம்பத்தில் மறுகாலனியாக்கத்தின் தொடக்கமாக காட் ஒப்பந்தத்தில் காங்கிரசு அரசு கையொப்பமிட்டு தாராளமயம்,உலகமயத்தை ஆரம்பித்து வைத்தபோது மக்கள் விழிப்புற்று விடாதிருக்க அப்போது பாஜகவும் காங்கிரசும் 'ராமர் கோவிலை பாபர் இடித்தாரா இல்லையா' என்ற விவாதத்தில் மக்களை மூழ்க வைத்து மதரீதியில் மக்களைப் பிளந்தன. காலங்காலமாய் பிரிட்டிஷ் காரன் செய்து வந்த அதே பிரித்தாளும் தந்திரத்தை இன்றும் கடைப்பிடிக்கின்றன.

'ராமன் பாலப் பிரச்சினை' என்பது பெருவாரியான இந்துக்களின் பிரச்சினையே அல்ல. இல்லாத ராமன் பாலத்தைப் பேசவைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. அதனுடன் கூட்டாளிகளாக ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என சகலவிதமான கழிசடைகளும் கைகோர்த்துள்ளனர்.

பெரியாரின் வாரிசுகளாகக் கூறிக்கொள்பவர்கள் இந்த சதியை எவ்வாறு முறியடிக்கப் போகிறார்கள்?

ராமர் பாலம் பற்றி கருணாநிதி விமர்சித்தவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகள் கருணாநிதியின் மகள் வீட்டைத்தாக்கியுள்ளனர். தமிழக அரசுப் பேருந்தைக் கொளுத்தி 2 பேரை உயிருடன் கொளுத்தி நரவேட்டை நடத்தி உள்ளனர். இவ்வளவு தூரம் போன பின்னரும், ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தபோதிலும், இம்மதவெறிக்கும்பலை கருணாநிதி அடக்கி ஒடுக்கத் தயங்குகிறார்.

காங்கிரசின் போலி மதச்சார்பின்மை சாயம் வெளுத்துப்போய் அதன் இந்து மதவெறி அம்பலமான பின்னரும் இரண்டு போலிகளும் காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் பாஜகவை தனிமைப்படுத்தலாம் என்று அடிப்படையே இல்லாமல் பசப்பிவருகிறார்கள். 'இந்து மதவெறிக் கும்பல்' என்பதைக் கூட நேரடியாகச் சொல்லத் திராணியின்றி 'மதவாத சக்திகள்' எனப் பொத்தாம்பொதுவாகப் பேசுவதுதான் போலிகளின் மதவெறி எதிர்ப்பு.

அணுசக்தி ஒப்பந்தம்,அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் என்று நாட்டை மறுகாலனியாக்கப் படுகுழியில் ஆளும் வர்க்கம் வீழ்த்தி வரும் வேளையில் மக்களைத் திசை திருப்பிடும் மதவெறிப்பிரச்சாரத்தில் மும்முரமாய் இறங்கி இருக்கும் சங்க பரிவாரத்தை வீதியில் இறங்கி எதிர்தாக்குதல் நடத்தி முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.
Related:

Friday, September 28, 2007

விடுதலைப் போரின் விடிவெள்ளி !


இன்று மாவீரன் பகத் சிங்கின் 101-வது பிறந்த நாள் !


ஆங்கிலேய காலனியாதிக்கத்திடமிருந்து, இந்திய சுதந்திரத்தை மீட்டெடுக்கத் துடித்த எண்ணற்ற இளைஞர்களின் இதயத் துடிப்பு அவன். அன்று மட்டுமல்ல இன்றும், ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கதிலிருந்த்து மக்களை மீட்டு ஒரு புதிய ஜனநாயகத்தைச் சாதிக்கத் துடிக்கும் எல்லோருக்கும் அவன் ஒரு கலங்கரை விளக்கம்.


தியாகத்தின் திருவுருவாய் மட்டுமின்றி, போராடுபவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்றுகண்னாய்த் திகழ்பவன் பகத்சிங்.அவனது நினைவுகளை நெஞ்சிலேந்துவோம், அவன் காட்டிய வழியிலே மக்கள் விடுதலையைச் சாதிப்போம்.

..


அந்த வீரன் இன்னும் சாகவில்லை !நன்றி இவான்

Thursday, September 27, 2007

பெரும்பான்மையினரின் நம்பிக்கையும் பாசிசப் பன்றிகளின் பிதற்றலும் !!

இன்று காலை ஆரியர்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவியும்,பார்ப்பன பாசிசத்தின் தமிழ்நாட்டின் பிரதிநிதியுமான ஜெயலலிதா வெளியீட்டுள்ள ஒரு அறிக்கையிலிருந்து..

"இன்றைக்கு தமிழ்நாட்டில் தீண்டாமையை எதிர்த்து சிலர் பேசி வருகின்றனர். தீண்டாமை என்பது இறைவனால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு கொடை. அதை எதிர்ப்பது இறைவன் வகுத்தளித்த சநாதன தர்மத்தையே எதிர்ப்பதாகும். பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீ ராமனின் ஆட்சியில் இந்த சநாதன தர்மத்தின் கீழ் மக்கள் எவ்வளவு சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் பல கோடி சாதி இந்துக்களின் நம்பிக்கை இந்தத் தீண்டாமை. இவர்கள் எப்படி ராமர் பாலத்தை ஏற்க மறுக்கிறார்களோ அதே போல தீண்டாமையையும் ஏற்க மறுக்கிறார்கள். இது இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ள எங்களைப் போன்ற அனைவரது நெஞ்சத்தையும் புண்படுத்துகிறது. இவர்களுக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம் அது அவர்களது சொந்த விஷயம். ஆனால் பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது தவறு."

ராமன் பாலத்தைக் காக்க ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் அவர் வெளியிட நினைத்து மறந்து போன ஒரு பகுதியை நாமே வெளியிட்டுள்ளோம்.

தனது நம்பிக்கையைப் பெரும்பாலானவர்களின் மீது திணிக்கும் பார்ப்பனியத்தின் அதே பாசிசத் தன்மையைத் தனது அறிக்கையில் கக்கியுள்ளார் இந்தப் பாப்பாத்தி. இவரும், இவர் சார்ந்த பார்ப்பனர் சங்கமான ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கூட்டமும், இல்லாத ராமனுக்கும் கற்பனைப் பாலத்திற்கும் பெங்களூரில் இரண்டு அப்பாவிகளைக் கொன்றுள்ளனர். இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம் மக்களிடையே உள்ள சாதாரண மத நம்பிக்கையை, மதவெறியாகத் தூண்டி விட்டு அவர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
.
ஒரு பகுதியில் அரசியல் ரீதியில் காலூண்ற இவர்களுக்குத் தெறிந்த ஒரே வழிமுறை கலவரத்தைத் தூண்டுவது. எப்போ தருணம் வரும் எவனைக் கொல்லலாம், எப்படி கலவரத்தைத் தூண்டலாம் என சர்வ சதா காலமும் காத்துக் கிடக்கின்றனர். இதனால் தான் ராமனைப் பற்றிய பிரச்சனை வந்தவுடன் ஏன் எதற்கு என்று கூடக் கேட்காமல் தாக்குதல் தொடுக்கத் தொடங்கி விட்டனர். ராமாயணம் என்ற கதையில் ராமன் என்ற கற்பனைப் பாத்திரம் மோண்ட,பேண்ட இடங்களையெல்லாம் தோண்டியெடுத்து, இந்து நம்பிக்கை என்ற பெயரில் அட்டூளியமும், அராஜகமும் செய்யும் இவர்கள் அதனை எப்போதும் கலவரமாக்கவே முயற்சி செய்துள்ளனர்.

மும்பையில் தமிழர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிப் பல்லாயிரம் தமிழர்களைத் துரத்தியடித்தனர். பின்னர் பாபர் மசூதி இடிப்பின் போதும் இப்படித்தான் பெரும்பாண்மையினரின் நம்பிக்கை என்று கூறி முஸ்லீம்களைக் கொன்றனர். குஜராத்தில் கூட்டம் கூட்டமாகச் சென்று முஸ்லீம்களைக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றிக் கொல்வது என சிறிதுகூட மனிதாபிமானமே இல்லாத வானரப்படையைக் கொண்டு மக்களை மிரட்டியே ஆட்சியைப் பிடித்தான் நரேந்திர மோடி எனும் நரபலிச் சாமியார்.
.
இங்கு தமிழகத்தில், மண்டைக்காடு கலவரம், கோவைக் கலவரம் என மதவெறியைப் பரப்பி, கலவரங்களை உருவாக்கி பலரது உயிரைக் குடித்துள்ளனர். இவர்கள் இதுவரை தங்களது வளர்ச்சியை சிறுபான்மையினரின், தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தால்தான் பதிவு செய்துள்ளனர்.

இதே பெரும்பாண்மையினரின் நம்பிக்கையின் பெயரால்தான் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான் ஹிட்லர். அந்தப் பாசிசப் பேயின் பேரன், பேர்த்திதான் இந்த அத்வானியும், ஜெயலலிதாவும், விஜயகாந்தும். பெரும்பாண்மை பெரும்பாண்மை என்று இவர்கள் கத்துவதெல்லாம் தங்களது பாசிசத்தை மறைத்து, குற்றத்தை மக்கள் மீது சுமத்துவதற்க்கே.

இவர்களுக்கு ராமன் மேல் பக்தியுமில்லை அவன் கட்டியதாக இவர்கள் கூறும் பாலத்தின் மீது அக்கறையும் இல்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே கனவு அது தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் பாசிசக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர் போவதைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையில்லை. பன்னாட்டு முதலாளிகள் நமது நாட்டில் அடித்த கொள்ளையைச் சுலபமாக வெளியே கொண்டுபோகத் தங்க நாற்கரச் சாலையையும், சேதுக் கால்வாய்த்திட்டத்தையும் ஆரம்பித்ததே இந்த ஜெயா, அத்வானி அயோக்கியக் கும்பல்தான். அதைவிட்டு இன்று ஏதோ இந்துக்களின் நம்பிக்கையே தகர்ந்தது என்று தான் வகுத்த திட்டத்தைத் தானே எதிர்த்து ஊரை ஏமாற்றுகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக தினமலர், தினமணி உட்பட அனைத்து பத்திரிக்கைகளும் காவியிலேயே எழுதுகின்றனர். காங்கிரஸ், வை.கோ, விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைத்துக் கட்சியினரும் காவிகறையுடன் வலம்வருகின்றனர். மொத்ததில் தமிழகம் முழுமைக்கும் காவியடிக்க வருகிறது ஒரு வானரக் கூட்டம்.
Related:
..

Tuesday, September 25, 2007

ஆப்பசைத்து வாலறுந்த குரங்குகள்

உயிரினங்களை வைத்துச் சொல்லப் பட்ட கதைகளில் குரங்குக் கதைகள் பிரபலம். சற்று முட்டாள்தனமானதும், அதே சமயம் விஷமத்தனமானதுமான இந்தக் குரங்குகள் தங்களது முட்டாள்தனத்தினால் அப்பாவிகள் போன்று தோன்றினாலும், சற்று ஏமாந்தால் ஆளையே தீர்த்துக்கட்டும் அளவுக்கு பயங்கரமானவை. தன்னைவிட பலம்வாய்ந்த மிருகங்களிடம் வாலைக் குழைத்துக் கும்பிடுபோடும் அதே சமயம் பலகீனமானவர்களிடம் அதிக்களம் செய்யும். இத்தகைய குரங்குகளை நாம் காடுகளிலும், மரங்களிலும் தேட வேண்டியதில்லை இவை ஊருக்குள்ளேயே காவிக்கொடிக்குக் கீழ் கொட்டம்மடித்துக் கொண்டிருக்கும்.

நாமும் பல குரங்குக் கதைகளைக் கேட்டும், படித்தும் உள்ளோம். குஜராத்தில் குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு, அயோத்தியில் அயோக்கியத்தனம் செய்த குரங்கு, அமெரிக்க தொப்பிக்காரனிடம் ஏமாந்த குரங்கு,பெரியார் பிராண்ட் இஞ்சியைத் தின்ற குரங்கு எனப் பல கதைகளாக நீளும் இப்பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளதுதான் பகுத்தறிவு ஆப்பசைத்து வாலறுந்த குரங்கு கதை.

பரிணாம வளர்ச்சியில் சற்று பின்தங்கிய ஒரு இந்துத்வா குரங்குக் கூட்டம், வடமாநிலங்களில் தனது சேட்டைகளின் மூலம் மக்களைத் துன்புறுத்தி வந்தது. அது போதாதென்று தமிழகத்தையும் குறிவைத்துக் களத்தில் இறங்கின. இங்கே உள்ள ஜெயா குரங்கு, விஜயகாந்த் குரங்கு, சரத் குரங்கு போன்ற நட்புக் கூட்டங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்க்கும் பாலமிருக்கிறது, பாலமிருக்கிறது என்று கூறி, மூடநம்பிக்கையைப் பிளந்து பெரியார் அடித்த பகுத்தறிவு ஆப்பை அசைத்துப் பார்த்தது. ஆனால் இதன் மூலம் தனது வாலே துண்டாகும் என்று பாவம் அந்தக் குரங்குக்குத் தெரியவில்லை. வெறும் குச்சியைத் தூக்கினாலே ஓட்டம் பிடிக்கும் இந்தக் குரங்குக் கூட்டத்திற்க்குத் தலையைக் கொய்வதாய்ச் சவடால் வேறு. இந்நிலையில், தான் அசைத்த ஆப்பு தனது வாலைக் காவு வாங்கிவிட்டதை எண்ணி இப்போது புலம்பித் திரிகின்றது.

இந்தக் குரங்குகள் எத்தனை முறை சூடுபட்டாலும் புத்திவராமல் திரும்பத் திரும்ப வந்து அடிபட்டு ஓடுகின்றன. புதிது புதிதாக ஏதாவதொன்றைக் கையில் பிடித்தபடி எப்படியாவது தமிழகத்தில் அழிச்சாட்டியம் பன்ன வேண்டும் என்று முயன்றுகொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் இவற்றை விரட்டினால் திரும்பவந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன, இந்த இம்சையை ஒழிக்க இந்தக் குரங்குகளைக் கூண்டிலடைத்து, இல்லாத பாலத்தைத் தரிசிக்கக் கடலுக்குப் புனித யாத்திரை அனுப்புவதொன்றுதான் வழி. அதைத் தான் நாம் செய்ய வேண்டும், அதுதான் பகுத்தறிவுள்ள ஒரு மனிதனின் செயல்.
Related Articles:

Monday, September 17, 2007

பன்னாட்டு நிறுவனக் கைக்கூலி சிதம்பரத்தின் அரிய சாதனைகள் !

 • அமெரிக்க எரிசக்தி கம்பெனியான என்ரானுக்கு ஆதராவாகவும், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் வழக்கறிஞராக செயல்பட்டு இந்திய அரசாங்கத்திடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை என்ரானுக்கு பெற்று தந்தவர்

 • ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் மருந்து கம்பெனிக்கு ஆதராவாக வழக்கறிஞராக களம் இறங்கி, இந்திய மக்களுக்கு புற்றுநோய்க்கான மருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு தான் கிடைக்க வேண்டும் என அதற்க்கான காப்புரிமையினை நோவார்டிஸ் க்கு பெற்று தர போராடி வருபவர்

 • தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக வாதாடி நிரந்தரமாக அவர்களை வீட்டுக்கு அனுப்ப போராடியவர்

 • இன்று இந்திய நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும், ஆயிரக்கணக்கான சிறுதொழில்களுக்கு மூடுவிழா நடத்துவதற்கும், இந்திய நாட்டு மக்களுக்கு எதிராக 24 மணி நேரமும் சிந்திப்பவர்.

இவர்தான் மன்மோகன்

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 தேதி, பஞ்சாபின் காக் பகுதியில் (இன்றைக்கு பாகிஸ்தானின் சக்வால் மாவட்டதில்) பிறந்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்பு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெற்று, IMF போன்ற பல்வேறு நிதி நிறுவனங்களிலும், பின்பு இந்திய அரசின் பல்வேறு நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வேலை பார்த்து, பின்பு படிப்படியாக திட்டக்குழு தலைவராக, பிரதமரின் பொருளாதார ஆலோசகராக உயர்ந்து, நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும், அதற்க்குப் பிறகு ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும், இறுதியில் இன்று இந்தியப் பிரதமராகவும் உள்ள மன்மோகன்சிங்கின் வாழ்க்கையில் ஒரே எறுமுகம்தான், ஆனால் ஒரெ ஒரு முறை மட்டும் அவர் இறங்கு முகத்தைச் சந்தித்தார். அது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தெற்க்கு டெல்லித் தொகுதியில் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வி. அதற்க்குப் பிறகு மக்களைச் சந்திக்கும் தைரியம் சிறிதுமின்றி தனது ஏறுமுகத்தைத் தக்க வைக்க வாழ்நாள் முழுவதும் ராஜ்ய சபா எம்.பி.யாக இருக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

1991 ல் நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடும் புதிய பொருளாதாரக் கொள்கையை வடித்துக் கொடுத்து, தனக்குப் பிறகு வரும் எல்லா ஆட்சிகளும் அதே நாசகர வேலையைத் தொடர்ந்து செய்ய வழிவகுத்தார். இன்றைக்கு பல லட்சம் விவசாயிகள் வாழ வழியிழந்து, பிழைப்புக்கு நாடோடிகளாகத் திறியும் இந்தக் கொடுமைக்கும், கல்வி முதல் மருத்துவம் வரை எல்லா சேவைத்துறைகளையும் காசாக மாற்றியதற்க்கும், தண்ணீர் முதற்கொண்டு எல்லா இயற்க்கை வளங்களும் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்கள் விழுங்கிவருவதற்க்கும், SEZ என்ற பெயரில் நாட்டையே வெளிநாடுகளின் சிறு சிறு காலனிகளாக மாற்றிவருவதற்க்கும், காரணம் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைதான்.
..
தனக்கு அளிக்கப்பட்ட மந்திரி பதவிக்கு மாற்றாக இவ்வளவு பெரிய சேவையைப் பன்னாட்டு முதலாளிகளுக்குச் செய்த மன்மோகன் சிங், இப்போது தன்னைப் பிரதமராகிய நன்றிக்கடனை எப்படி அடைக்கப்போகிரார்?

'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவர் வாக்கை மறக்காதவர் மன்மோகன் சிங். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிறுந்தால் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார், முதலாளிகள் அதுவும் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது முன்னாள் எஜமானர்களின் மனதைக் குளிரச் செய்யக் கொண்டுவந்தார் 123. இந்திய - அமெரிக்க கூட்டு இராணுவ ஒப்பந்ததின் மூலம் தன்னைப் பிரதமராக்கிய கடனை அடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ஒப்பந்தத்தைக் காக்க பிரதமர் பதவியையும் இழக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
..
123 ஒப்பந்தத்தால் ஏற்ப்படும் இழப்புகளையும், பாதிப்புகளையும் பற்றிப் பேசினால் மன்மோகன் சிங்கிற்கு இது தெறியாதா என புதிசாலித்தனமாகக் கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகளே, இந்த மன்மோகன் சிங் பதவிக்கு வந்து பின்பு குணம் மாறிய நமது நாட்டின் வழக்கமான அரசியல்வாதியல்ல, இந்தக் காரியத்தைச் சாதிப்பதற்க்காகவே வளர்த்து விடப்பட்டு, ஆட்சியதிகாரத்தில் அமரவைக்கப்பட்டுள்ள அடியாள், இவருக்கு எல்லாம் தெரியும். இவரது வாழ்கையை மேலோட்டமாகப் பார்த்தாலே போதும் இவரது விசுவாசம் யாருக்கானது என்பது சுலபமாகப் புலப்படும்.

'செவ்வணக்கம்'


வர்க்கப் போராட்டதில் உயிர் நீத்த எல்லாத் தியாகிகளுக்கும் செவ்வணக்கம்

இணைப்பு