Friday, November 9, 2007

ஆட்சியாளர்களை மாற்றினால் அரசை மாற்ற முடியுமா?

  • சிறப்பு பொருளாதார மண்டலம் நாட்டோடு 'வளர்ச்சி' க்கு என்று சொல்லி ஜெட் வேகத்தில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை சுட்டு கொல்லுகின்றனர்.

  • கோடிக்கணக்கான மக்கள் இறுதிக்கட்ட வாழ்வாதாரமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட சில்லறை வணிகத்தில் இன்று ரிலையண்ஸ், டாடா, வால்மார்ட் போன்ற பெரிய கம்பெனிகளை அனுமதித்து அவர்களை குப்பைத்தொட்டியில் வீசுவது போல வீசுகின்றனர்.
  • 5 லட்சம் கோடிக்கு அணுசக்தி ஒப்பந்தம் என்கிற வழியில் அடிமைசரத்துகளுடன் வெளிப்படையாக தெரியக் கூடிய 123 ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கின்றனர். இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்தாக வரும் இதனை கடந்த BJP ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவேற்றக்கூடிய நிலையில் வந்துவிட்டார்கள்.
    அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' , பாதுகாப்பு உணர்வுடைய நாட்டிலேயே 2 1/2 சதவீதம் தான் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் உள்ளது, ஆனால் இவர்கள் நம்ம நாட்டில் இருக்கின்ற 3 சதவீதத்தை 7 ஆக மாற்ற போகின்றனராம். அதுவும் 2020-ல் தான் கிடைக்குமாம். ஆனால் நம் நாட்டிலே அதிகமாக உள்ள தோரியத்தை செறிவூட்டி மின்சாரம் கிடைக்க செய்வதில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதில் வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் மின்சாரத்தை பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று உடனடியாக 123 இல்லைன்னா நாடே இருட்டாகி விடும் என்கிற சூழ்நிலையும் இல்லை என்ற இரண்டு அம்சங்களையும் தவிர்த்து விட்டு கூட பார்ப்போம்.
    3 யை 7 ஆக மாத்துவதை அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' நாட்டில் செய்வதற்கே அந்நாட்டு மக்கள் ஒத்துக்குறது இல்லைங்கிற சூழ்நிலையில் அதை இந்தியா போன்ற ஏழை நாட்டில், பாதுக்காப்பு உணர்வுணா என்னவென்று தெரியாத நிலையில் ஆகப் பெரும்பாண்மை மக்களை வைத்து உள்ள நாட்டில் கொண்டு வரப்போறேன் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம். உலகம் முழுவதும் விலை போகாத இந்த உலைகள் மூலம் 5 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் விடுவார்களா.
    இது வெறும் 3 T0 7 என்கின்ற விஷயத்துக்கும் மட்டும். ஆனால் இவர்கள் சொல்கின்ற இராணுவ ஒப்பந்தத்தை எடுத்து கொண்டால் அதில் இருக்கின்ற அடிமைச் சரத்துகளை பற்றி நினைத்துப்பார்க்க கூட முடியாத அளவுக்கு, வெளிப்படையாகவே இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில் உருவாக்கி உள்ளார்கள்.

  • அடுத்து நாட்டுல 83 கோடி பேருக்கு தினமும் ரூ20 சம்பளம் என்கிற லட்சணத்தில் ஆக்கிபுட்டு இவர்கள் சொல்கின்ற GTP 9 சதவிதம், பங்குசந்தை 20,000 புள்ளிகளை தாண்டி பறக்கிறது போன்றவை. ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி என்கிற ஒருத்தன் 2 1/2 லட்சம் கோடியை கொள்ளையடிக்க செய்து உலகின் நம்பர் ஒன் பணக்காரனாக்க தாங்கள் செய்த சாதனையும் சொல்லி 'நாடு வளர்ச்சி' அடைகிறது என்கிறார்கள்


இப்ப மேலே சொல்லியிருக்கின்ற சிறப்பு பொருளாதார மண்டலம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை- தரகுமுதலாளிகளை அனுமதிப்பது, அமெரிக்க - இந்தியா இராணுவ ஒப்பந்தம் & 123 அக்ரிமெண்ட், தேசிய வளர்ச்சி என்கிற மோசடி பற்றி எல்லா ஆட்சியாளர்கள் ஓட்டுப்பொறுக்கிகள் என்ன கருதுகின்றனர். ஒன்று மின்சாரம் தேவை, வேலைவாய்ப்பு என்ற இரண்டு வார்த்தை கொண்டு சத்த்த்த்த்த்ததததததமாககககககக ஆதரவு குரல் அல்லது மெளனம் இது இரண்டும் தான் பதிலாக வருகிறது.இதனை கொண்டு தான் பதிவின் தலைப்பை விளக்க போகிறோம்.


ஆதரவு குரலில் இரண்டு வகையாக இருக்கின்றனர். ஒன்று ஆட்சியில் இருந்தவர்கள் -இருக்கின்றவர்களுடைய நேரடி ஆதரவு. மற்றொன்று கூட்டணி சுகத்தில் இருந்தவர்கள் - இருக்கின்றவர்களுடைய மறைமுக ஆதரவு. இந்த இரண்டு பேருக்கும் மேலே உள்ள விசயங்களை பற்றி தெட்ட தெளிவாக தெரியும். இதுவரை ஆட்சிக்கு வராதவர்களுக்கும் , விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடை அரசியல் வாதிகளுக்கும் மட்டும் தான் இதை பற்றி தெரியாது.


அப்ப எதிர்ப்பு என்பதை பேசாத, அரை-குறையாக பேசுவது மாதிரி, தெரியாது என்கிற இந்த லிஸ்டை விரிவாக பார்த்தா புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். இதுல முக்கியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டியது இதில் பேசாத, அரை-குறை பேசுவது மாதிரி இரண்டு பேருமே ஜான் பெர்க்கின்ஸ் (பொருளாதார அடியாள்) வரைக்கும் தெரிந்த ஆட்சியாளர்கள், பழம் தின்னவர்கள். என்ன வித்தியாசம் என்றால் கொட்டை போட்டவர், போடாதவர் என்பதுதான்.


முதல வருகிறவர்களை பார்ப்போம், பல்லாயிரக்கணக்கான கோடியினை இப்படி நாட்டை விற்க துணைபோய் சம்பாதித்த இவர்கள் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. எப்படி பேசுவார்கள் என்றால் நாடு வளர்ச்சியடைகிறது, போய்கொண்டு இருக்கிறது, இளைஞர்களே தியாகம் செய்ய வாருங்கள், ஒளிர்கிறது இந்தியா, தீவிரவாதத்தை நாங்கள் அடக்கியது போல இவர்கள் அடக்குவது இல்லை என்று ஆளே இல்லாத மேடையில் பேசுவது போல பேட்டி கொடுப்பார்கள். என்னா இப்ப இவர்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் 100% பிழைப்புவாதிகள்.

இந்த லிஸ்டில் IMF மண்மோகன், ENGLAND சோனியா, கலவர நாயகன் அத்வானி, எட்டப்பன் வாஜ்பாய், பன்னாட்டு நிறுவன வக்கில் சிதம்பரம் & சன், திமுக டிரஸ்ட் ஓனர் , அம்மா டிரஸ்ட் ஓனரம்மா , ஊழல் லாலு, ஹெரிடேஜ் சந்திரபாபு, இன்னும் காங்கிரஸ் அரச பரம்பரை, பா ஜ க அன் கோ வை சேர்ந்த ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


அடுத்து இரண்டாவதாக முழுமையாக நாட்டை விற்று கொள்ளையடிக்காதவர்கள், கூட்டணி சுகத்தில் மட்டும், சிலர் சில மாநிலங்களில் ஆட்சி என இருக்கின்றவர்கள். இவர்களிலும் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. இவர்கள் எப்படி பேசுவார்கள் என்றால் "ஆகக அதெல்லாம் முடியாது", மாற்றுங்க இதை, தள்ளி வைங்க இதை, மக்களே இவர்கள் கொள்கையினை நாம் எதிர்த்து போராடனும், துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாதது, நக்சல் சதி, நாடு தழுவிய போராட்டம், நீதியின் குரல் ஒலிக்கட்டும், மக்கள் புரட்சி வெடிக்கட்டும், தமிழ்நாடு 2020 ( இந்தியா 2020 வீட்டுக்குப் போன பின்) என்றும் முக்கியமாக எங்களால் "இவர்கள் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றும் அடிக்கடி பேட்டியும். அறிவிப்புகளும் செய்வார்கள்.


என்னா இப்ப இவர்கள் கட்சியில் பிழைப்புவாதிகளும், சரியான கட்சி என நம்பி சிலரும் இருக்கின்றனர்.தெரியாதவர்களுக்கு தெரியவரும் போது சிலர் சரியான புரட்சிக்கர அரசியலுக்கு வருகின்றனர் அல்லது அதே பிழைப்புவாத அரசியலில் மூழ்கிவிடுகின்றனர்.


இந்த லிஸ்டில் போலிக் கம்யூனிஸ்டுகள், ராமதாஸ் குடும்பம், அரசியல் அசிங்கம் வைகோ,வாழும் அம்பேத்கார் திருமா, மாயாவதி மாமி............ போன்றவர்கள் இருக்கிறார்கள்.


அடுத்து மூன்றாவதாக பணம் மற்றும் சாதி அடிப்படையில் கட்சி ஆரம்பித்து இன்னும் ஆட்சிக்கே வராதவர்கள், கழிசடையாக இருந்து சொத்து சேர்த்ததை வைத்து கட்சி உருவாக்கி எம்.ஜி.ஆர் போன்ற பேண்டஸி அரசியலை மட்டும் வைத்தே இன்றும் மக்களை மடையர்களாக்க களத்தில் இறங்கி இருப்பவர்கள். மேலே இருக்கின்ற விஷயத்துக்கே போக மாட்டார்கள்.

இவர்கள் பேச்சு எப்படி இருக்கும் என்றால் 'ஜிபூம்பா' ஸ்டையில இந்தியாவை மாத்திடலாம் என்பதும், நாங்க வந்தா திருந்திடும் என்பதும் தான். எப்படி இப்படி கேணத்தனமாக யோசிக்கிறார்கள் என்கிறீர்களா, அடிப்படையே எதுவும் தெரியாது என்கிற காரணம்தான்.


இந்த லிஸ்டில் கார்த்திக் தேவர், கருப்பு காவி விஜயகாந்த், சமத்துவ நாடார் சரத்குமார், புதிய நீதிக் கட்சி சங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள்.


இந்த மூன்று லிஸ்டில் இரண்டாவதாக நீதி, போராட்டம் என்கிறவர்கள் ஒரு கட்டத்தில் சொத்து பல்லாயிரத்தை தாண்டியதும் அதாவது ஆட்சியினை முழுமையாக அனுபவிச்ச பிறகு முதல் லிஸ்டில் இருக்கின்றவர்கள் மாதிரி மாறிவிடுகிறார்கள்.


மூன்றாவதாக எதுவும் விஷயம் தெரியாமல் இருந்தவர்கள் வளர்ச்சியடையந்த உடன் 'ஜிபூம்பா' இனி பலிக்காது என்று இரண்டாவது லிஸ்டில் இருக்கின்றவர்களுடைய நீதி, போராட்டம், தமிழ் என தங்கள் பாதையினை மாற்றி கொள்கின்றனர்.


இப்படி எல்லா ஓட்டுக் கட்சிகளையும் இந்த மூன்று லிஸ்டில் முழுவதும் வகைப்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். மக்களுக்கான எதையுமே இவர்கள் செய்வதும் இல்லை, செய்யவும் முடியாது. ஏனென்றால் இந்த அமைப்பே தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த லிஸ்டில் உள்ள யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் செயல்படுவது இந்தப் தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்குத்தான்.


அப்ப இந்த அமைப்பில் ஆட்சியாளர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் இருக்கக்கூடிய இந்த அமைப்பையே தூக்கியெரிய வேண்டும், அப்போதுதான் பெரும்பான்மையான மக்களின் நலன்கொண்ட ஒரு அரசை அமைக்கமுடியும்.

No comments:

இணைப்பு