'தவறு செய்த தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம்' -- உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
குஜராத் அம்புஜா சிமெண்ட் கம்பெனியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கச் சொல்லி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்தான் இப்படிக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு (சும்மா பேச்சுக்குக்காவது) என்பதை கேலிக்குள்ளாக்குகிறது இந்தத் தீர்ப்பு. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கையான இடஒதுக்கீடு, மக்கள்தொகையில் மிகவும் அற்பமான பார்ப்பன மேல்சாதியர்களின் விருப்பத்திற்கிணங்க தடை செய்யப்பட்டது. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மைத் தமிழர்களின் ஆதரவோடு நடைபெற்ற வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டது.
பல லட்சம் டில்லி சிறு வணிகர்களைக் காலி செய்ய வைத்துத் தனது மகன்களுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டித் தர ஒரு நயவஞ்சக உத்தரவைப் பிறப்பித்து அதனை நிறைவேற்ற நாட்டின் இராணுவத்தையே ஒரு நீதிபதி பயன்படுத்தியதும் இங்கேதான்.
பல லட்சம் வழக்குகள் கிடப்பில் கிடக்க, பல்லாயிரம் மக்கள் குற்றாவாளிகளா இல்லையா என்றே தெரியாமல் வருடக் கணக்கில் சிறையில் கிடக்க, கோடீஸ்வரர்களுக்காகவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்காகவும், உயர் ஜாதியினருக்காகவும் விடுமுறை நாட்களில், நள்ளிரவில் கூட கடைதிறந்துத் தீர்ப்பை வியாபாரம் செய்வதும் இங்கேதான்.
இது மட்டுமல்ல கூலி உயர்வு கேட்டுப் போராடினால் சிறை, கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கேட்டுப் போராடினால் சிறை, வேலையை நிரந்தரமாக்கக் கோரினால் சிறை எனப் போராடுபவர்களை, தொழிலாளர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை, மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களைச் சட்டப்பூர்வமாக நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதும் இங்கேதான்.
இன்றைக்குத் தொழிலாளர்களை மனிதனாகக் கூட மதிக்காமல் ஒரு பாசிசத் தீர்ப்பை வழங்கிய இதே நீதி நீதிமன்றம் தான், பாசிச ஜெயலலிதா தனது மனசாட்சிப் படி தண்டனை வழங்கிக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.
பதவியிடம் தாழ்ந்து, பணத்திடம் தாழ்ந்து, உயர் ஜாதித் திமிரிடம் தாழ்ந்து, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களிடம் மேலும் தாழ்ந்து, சொறி நாயினும் கேவலமாக நாறிய போதும், உழைக்கும் மக்கள் மீது மட்டும் வெறிநாயாகப் பாய்கிறது இதன் சட்டங்கள்.
இதன் அக்கிரமங்களைப் பொறுத்துக் கொண்டே போனால், மக்களின் அந்தப் பொறுமையை மேலும் சோதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு, பார்ப்பன, உயர் ஜாதிகளுக்குத் தான் ஓர் அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.
இன்றைக்குத் தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம் என்று தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளட்டும். நாளைக்கு இவர்கள் தொழிலாளர்களின் கருணைக்காக ஏங்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் இவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதுதான் அது.
1 comment:
Read this as well
When court voluntarily intimidates Karunanidhi because he is against Brahmanism, it stays calm when it comes to selling India.
When asked about the Court to give reasons why it rejected a petition hearing a case relevant to the Nuclear Pact, the court replied like below.
@@@
When the petitioner asked it to give reasons for dismissing the petition, the Bench said: “We do not give reasons. It is the discretion of the court to entertain a petition.”
@@@
Post a Comment