Monday, September 17, 2007

இவர்தான் மன்மோகன்

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 தேதி, பஞ்சாபின் காக் பகுதியில் (இன்றைக்கு பாகிஸ்தானின் சக்வால் மாவட்டதில்) பிறந்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்பு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெற்று, IMF போன்ற பல்வேறு நிதி நிறுவனங்களிலும், பின்பு இந்திய அரசின் பல்வேறு நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வேலை பார்த்து, பின்பு படிப்படியாக திட்டக்குழு தலைவராக, பிரதமரின் பொருளாதார ஆலோசகராக உயர்ந்து, நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும், அதற்க்குப் பிறகு ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும், இறுதியில் இன்று இந்தியப் பிரதமராகவும் உள்ள மன்மோகன்சிங்கின் வாழ்க்கையில் ஒரே எறுமுகம்தான், ஆனால் ஒரெ ஒரு முறை மட்டும் அவர் இறங்கு முகத்தைச் சந்தித்தார். அது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தெற்க்கு டெல்லித் தொகுதியில் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வி. அதற்க்குப் பிறகு மக்களைச் சந்திக்கும் தைரியம் சிறிதுமின்றி தனது ஏறுமுகத்தைத் தக்க வைக்க வாழ்நாள் முழுவதும் ராஜ்ய சபா எம்.பி.யாக இருக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

1991 ல் நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடும் புதிய பொருளாதாரக் கொள்கையை வடித்துக் கொடுத்து, தனக்குப் பிறகு வரும் எல்லா ஆட்சிகளும் அதே நாசகர வேலையைத் தொடர்ந்து செய்ய வழிவகுத்தார். இன்றைக்கு பல லட்சம் விவசாயிகள் வாழ வழியிழந்து, பிழைப்புக்கு நாடோடிகளாகத் திறியும் இந்தக் கொடுமைக்கும், கல்வி முதல் மருத்துவம் வரை எல்லா சேவைத்துறைகளையும் காசாக மாற்றியதற்க்கும், தண்ணீர் முதற்கொண்டு எல்லா இயற்க்கை வளங்களும் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்கள் விழுங்கிவருவதற்க்கும், SEZ என்ற பெயரில் நாட்டையே வெளிநாடுகளின் சிறு சிறு காலனிகளாக மாற்றிவருவதற்க்கும், காரணம் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைதான்.
..
தனக்கு அளிக்கப்பட்ட மந்திரி பதவிக்கு மாற்றாக இவ்வளவு பெரிய சேவையைப் பன்னாட்டு முதலாளிகளுக்குச் செய்த மன்மோகன் சிங், இப்போது தன்னைப் பிரதமராகிய நன்றிக்கடனை எப்படி அடைக்கப்போகிரார்?

'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவர் வாக்கை மறக்காதவர் மன்மோகன் சிங். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிறுந்தால் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார், முதலாளிகள் அதுவும் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது முன்னாள் எஜமானர்களின் மனதைக் குளிரச் செய்யக் கொண்டுவந்தார் 123. இந்திய - அமெரிக்க கூட்டு இராணுவ ஒப்பந்ததின் மூலம் தன்னைப் பிரதமராக்கிய கடனை அடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ஒப்பந்தத்தைக் காக்க பிரதமர் பதவியையும் இழக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
..
123 ஒப்பந்தத்தால் ஏற்ப்படும் இழப்புகளையும், பாதிப்புகளையும் பற்றிப் பேசினால் மன்மோகன் சிங்கிற்கு இது தெறியாதா என புதிசாலித்தனமாகக் கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகளே, இந்த மன்மோகன் சிங் பதவிக்கு வந்து பின்பு குணம் மாறிய நமது நாட்டின் வழக்கமான அரசியல்வாதியல்ல, இந்தக் காரியத்தைச் சாதிப்பதற்க்காகவே வளர்த்து விடப்பட்டு, ஆட்சியதிகாரத்தில் அமரவைக்கப்பட்டுள்ள அடியாள், இவருக்கு எல்லாம் தெரியும். இவரது வாழ்கையை மேலோட்டமாகப் பார்த்தாலே போதும் இவரது விசுவாசம் யாருக்கானது என்பது சுலபமாகப் புலப்படும்.

1 comment:

said...

ஒரு துரோகியை அம்பலப்படுத்தும் முதல் பதிவோடு அமர்களமாக வலையுலகிற்கு வந்திருக்கும் தோழர். இரும்பினை வருக வருக என்று வரவேற்கிறேன்.

எந்த சுரணையும், உயிர்ப்பும், உணர்ச்சியுமற்ற ஒரு பிணத்தின் முகத்தை ஒத்தது மண்மோகன் சிங்கின் முகம், அந்த முகம் இன்று கோபம் கொண்டு சிவக்கிறது, எங்கே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று., தனது எசமானர்களிடம் எவ்வளவு விசுவாசம் இருந்தால் இந்த அடிமைக்கு இயல்புக்குமீறிய இப்படியொரு கோபம் பொத்துக்கொண்டுவரும், 90களிலேயே யுரேனியம் எடுப்பதற்கு நிதியொதுக்க மறுத்துவிட்டு இன்று யுரேனியம் இல்லையென்பதையே காரணமாக்கி இப்படியொரு ஒப்பந்தத்திற்கு வித்திட்டிருக்கும் இந்த மண்மோகன் பல பாரிய திட்டங்களுக்காக ஏகாதிபத்தியங்களால் பரமாரித்து வளர்க்கப்பட்ட வளர்ப்புபிராணிதான் என்பது தெள்ளத்தெளிவானது. இன்னும் இந்த அமெரிக்க உளவாளி மண்மோகனை அப்பாவியாக நம்புபவர்கள், ஜார்ஜ் புஷ்சை ஜனநாயகத்தின் தூதுவனாகவும் நம்ப்லாம்.

இணைப்பு