Thursday, November 29, 2007

அடிமைத்தனங்களே நாகரிகமாக!

சாதிய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத ஏகாதிபத்திய படிமானங்கள்

இது இருபத்தோராம் நு¡ற்றாண்டு இங்கே யார் சாதி பார்க்கிறார்கள்? சாதியை கேட்பதே நாகரிகக் குறைவு.சொல்லப்போனால் உங்களை போன்றவர்கள்தான்இல்லாத பிரச்சனையை பற்றி பேசுகின்றீர்கள்.
..
"கல்வி சாதியை ஒழிக்கும்,அவர்களூக்கு என்ன குறை? அரசாங்கம் அவர்களுக்கு எல்லா வசதியும் தான் தருகின்றதே!"சொல்லப்போனால் பெண்கள் எல்லாதுறையிலும் தான் முன்னேறிவருகின்றார்கள்.பிற்கலத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் அளவுக்கு ஆகப்போகுதுன்னு மட்டும் பாருங்க! இது ஐ.டி.காலம் புரிஞ்சுகோங்க!
..
இப்படிப்பட்ட பேச்சுக்கள் தான் மானங்கெட்ட இந்தியத்துக்கு பூ வைத்து அழகு பார்க்கின்றன.என்ன தான்சப்பைகட்டு கட்டினாலும் வருணாசிரம வெறியை மொத்தமாய் குத்தகை எடுத்திருக்கும்,பார்ப்பனீயத்தை வீழ்த்தாமல் சமத்துவம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல சம்பவங்கள் நிகழ்த்தபடுகின்றன எனலாம்.
..
விழுப்புரம் மாவட்டம்,சின்னசேலம் அருகே உள்ள மரவாநத்ததை சேர்ந்தவன் சின்னசாமிகவுண்டன்.இவனுடைய இரண்டாவது மகள் சுதா கல்லூரியில் படிக்கும் போதே நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனை காதலித்து இருக்கிறார்.படிப்பு முடிந்ததும் இமச்சல பிரதேசத்தில் வேலைகிடைத்துவிடவே,காதலுக்கு வீட்டில் அனுமதி கிடைக்காததால் தமிழ்ச்செல்வனின் குடும்ப சம்மதத்தோடு திருமணம் நடந்து விட்டது.எட்டு மாதம் கழித்து வளைக்காப்புக்காக தமிழ்ச்செல்வனின் சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்திருக்கிறார்.
..
இத்தகவல் தெரியவரவேசின்னசாமிகவுண்டனும் அவனுடைய மூன்றவது மகன் சங்கரும் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.சுதா விட்டுக்கு வந்ததும் அவருடைய அப்பனும் தம்பியும் சேர்ந்து கடப்பரையால் அடித்து கொன்றிருக்கின்றனர். தப்பித்தவறி குழந்தை உயிருடன் பிறந்துவிடக்கூடாது என்பதற்காக வயிற்றிலும் அடித்திருக்கின்றார்கள்.
..
------------------------------------------------------------------------------------------------
அது எல்லாம் படிக்காத முட்டாள் கிராமத்து என்று வாய்கிழிய பேசுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும் சின்னசாமிதான் படிக்காதவன் முட்டாள். சரி அவனுடைய மகன் சங்கர் யார் தெரியுமா?நன்றாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும் அடிமைகளில் ஒருவன்.28 வயதான சங்கர் சாதியை ஒழிக்கும் படிப்பை படித்துவிட்டு"ஆபீஸ் டைகர்"என்ற பன்னாட்டு நிறுவனத்தில் சென்னை ஒன்றில் அம்18,000 சம்பளம் வாங்கும் மேற்பார்வையாளன்.
..
சாதீய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத இந்த நாகரீகம்,இந்த அடிமைத்தனம் பார்ப்பனீயத்தை போற்றி பாதுகாத்து வருகின்றன.ஏகாதிபத்தியமும் பார்ப்பனீயமும் தண்டவாளங்களை போல செயல்படுகின்றன.ஒன்றிற்கு ஒன்று பாதுகாப்பு அரணாக இருக்கின்றனன்
..
இந்த இடத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவது முக்கியமானது இரண்டு 1.பாலின சமத்துவம் 2.நட்பு
..
" இப்போது பெண்கள் தான் எல்லா விசயத்திலும் முன்னாடி இருக்காங்க.பஸ், ரயில்எல்லவற்றிலும்பெண்களுக்குதனிசலுகை,தியேட்டரில் டிக்கட் எடுப்பதிலிருந்து பேங்க் க்யூ வரை பெண்களுக்கு சலுகை தான்.பெண்கள் முன்னே வரணும்ங்கிறதுக்காக அரசு என்னனவோ திட்டம் போடுது.அதிகமா இடம் கொடுத்தது தப்பா போச்சு,துளிர்விட்டுபோச்சு,நம்ம கலாச்சாரத்தையே கேவலப்படுத்தறாங்க "
..
இப்படிப்பட்ட ஆசனவாய் அரிப்புகளை பார்ப்பனீயசெரிப்பில் கழிவாகிப்போன ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் கூடத்தான் சொறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.பேருந்தில் பெண்களின் இருக்கைகளில் உட்கர்ந்து கொண்டு எழ மறுக்கும் ஆண்கள் ஆண் உரிமையை பேசுகிறார்கள்.ஆடுகள் அதிகமாகி விட்டால் எவ்வளவு தான் சாப்பிடுவதென ஓநாய்கள் கவலைப்படுகின்றன.
..
பெண் பிறப்பு முதல் இறப்பு வரை நுகர்பொருளாக்கப்படுகின்றார்.பல இடங்களில் பொருளை பார்த்தவுடனேயே புதை குழிக்கு அனுப்பப்படுகின்றது.
பெண்களுக்கென பல்லாங்குழி,தாயம்,கண்ணாமூச்சி,போன்ற உடலை வலுச்சேர்க்காத விளையாட்டுக்களே ஒதுக்கப்படுகின்றன.விளையாட்டு என்பது உடலையும்,மனதையும் வலுப்படுத்தவதாயிருக்க வேண்டும்.விளையாட்டுக்கள் மறந்து கூட பெண்களுக்கு வலுச்சேர்த்திடக்கூடாதென்பதில் தீவிரமாய் இருக்கிறது இச்சமூகம்.குறிப்பிட்ட வயது எட்டியவுடன் என் பெண் வயதுக்குவந்துவிட்டாள் எனக்கூறி நேரடியகவே விற்பனை சரக்ககவே மாற்றுகின்றது.இந்த வயதில் புதிதாய் முளைக்கின்றது கேள்விகள்"பொம்பளை பிள்ளைன்னாஅடக்கஒடுக்கமா இருக்கணும்".என் பெண்ணின் உடலில் எற்பட்ட அறிவியல் மாற்றத்தை ஏன் மற்றவனுக்கு தெரிவிக்கவேண்டும் என எந்த அப்பனும் நினைப்பதில்லை.
..
கல்லு¡ரிக்கு அனுப்பப்படும் போது ஆண்களுக்கு போதிக்கப்படாத கற்பும்,ஒழுக்கமும் பெண்களுக்கு மட்டும் அறிவுறுத்தப்படுகின்றன.கேட்கும் கேள்விகளுக்கு நான் விரும்பும் பதிலைத்தான் தரவேண்டும் இது தான் இச்சமுகம் போட்டிருக்கும் கட்டளை.கல்லூரியிலும் சரி அலுவலகங்களிலும் சரி ஆபாசமாக பேசுவதும்,தரக்குறைவாக நடந்து கொள்வதும் ஆண்களின் பிறப்புரிமையாகவும் இதை பெண்கள் அமைதியாகவும் இருத்தலே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அலுவலகத்தில் ஒரு ஆண் நண்பருடன் பழகுவது என்பது எண்ணளவில் விபச்சாரத்தனமாக நடந்து கொள்வது அங்கீகரிக்கப்படுகின்றது.அதாவது ஆண் நண்பனை கேள்விக்குள்ளாக்குவது,அவனின் கிண்டல்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளுதல் போன்றவையே எண்ணளவில் விபச்சாரத்தனமாகும்.
..
சிலபெண்கள் பன்னாட்டு மூலதனத்தின் வரவால் ஆடை குறைப்பிலும்,தினம் ஒரு ஆண் என்றபடி சுற்றுவது பெண்ணுரிமை அல்ல,இது மாறாக பெண்ணடிமைத்தனத்தின் மறு முகமாகும்.பெண்ணுரிமை என்பதின் முதல் படியே பெண்ணை பேசவிடுவதே.ஆனால் பேசவிடுதல் என்பது அடக்கப்பட்ட பெண்ணீடமும் சரி,பெண்ணுரிமை என்று ஊர் மேயும் சிலரிடமும் சரி இரண்டிடதிலும் மறுக்கப்படுகின்றது.
..
ஏனெனில் இந்த இரண்டுமே ஆணாதிக்கதின் வழிகாட்டுதல்களே. ஆணை கேள்விக்குள்ளாக்குவது என்பதே வாயாடி என வழக்கிலுள்ளது. பொறுக்கிகளுக்கு எப்போதும் விபச்சாரண் பட்டம் கிடைப்பதில்லை.ஓடிபோதல் என்பது ஒரு பெண் தான் விரும்பும் துணையை தெரிந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுவதனாலேயே நிகழ்கிறது.துணையை தெரிந்தெடுக்கும் உரிமையை பொறுத்தமட்டில் ஆணுக்கு வழங்கப்படும் உரிமையும்,மன்னிப்பும் பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. வாயாடி,விபச்சாரி போன்ற வினைச்சொற்கள் பெயர்சொற்களாக பெண்ணுக்கு வழங்கப்படுகின்றது. கற்பை காப்பதும்,பேச்சை குறைப்பதுமே பெண்மைக்கு இலக்கணமாக கூறப்படுகின்றது.
..
பாலின ரீதியில் எந்த வேறுபாடு இல்லாதபோதும் தாயாய்,சகோதரியாய்,மனைவியாக இருக்கும் பெண்ணை அடிமையாய் வைத்திருப்பதும் கலாச்சாரம் என்றும், ஒரு பெண் தானே விரும்பும் துணையை தெரிந்தெடுந்தெடுப்பதால் அக்கலாச்சாரம் அழியுமானால் அது ஒழிக்கப்படவேண்டிய கலாச்சாரமே!
..
பிச்சைக்காரனா ருந்தலும் கவுண்டனுக்குதான் கட்டிக்கொடுப்பேன்.வேற சாதிக்காரனுக்கு கட்டிக்கொடுக்கமாட்டேன் என்ற சின்னசாமியின் வார்த்தைகள் பார்ப்பனீயத்தின் வாயிலில் இருந்து உரத்து கேட்கின்றன.நீ ஒருபொருள்,நான் எதிர்பார்ப்பதை நீ தர வேண்டும்,உனக்கென தனி உரிமை கிடையது, உன்னை உருவாக்கிய எனக்கு அழிக்கவும் உரிமை உண்டு.இதையேதான் முதலாளித்துவமும் சொல்கிறது "இது என்னுடைய நிறுவனம் இங்கு யார் வேலை செய்யவேண்டுமென்பதை நான் தான் முடிவு செய்வேன்".என் மூலதனத்தில் நீ கேள்வி கேட்க உரிமை இல்லை.
..
------------------------------------------------------------------------------------------------
2020-ல் வல்லரசாக போகும் இந்தியாவின் தூண்களில் ஒருவனான சங்கர்,இந்தியா எதில் வல்லரசாகும் என்பதை தெள்ள தெளிவாக நிரூபித்திருக்கிறான்..சங்கர் வேலை செய்து வந்த ஆபீஸ் டைகர் என்ற அந்த நிறுவனத்தில் அய்ந்திலக்க சம்பளம் வாங்கும் வேலை அதிகம் செய்யாத பலரில் அவனும் ஒருவன்.
..
அவனுடைய நண்பர்கள் சொல்கிறார்கள்"எப்போதும் கலகலவென இருப்பான்,முகந்தெரியாத ஒருவனுக்கு ஆயிரக்கணக்கில் உதவி செய்தான்.அவனா இப்படி? கோபம் மனிதனை ஆட்டுவிக்கிறது.
..
அவர்களின் கேள்வியில் உயிரில்லாததை போலவே அவர்கள் சங்கரின் மேல் கொண்ட நட்பிலும் உயிரிருக்கவில்லை.
..
எங்கெல்ஸ்,காரல்மார்க்ஸ்-ன் நட்பு மக்கள் நலனைஅடிப்படையாக கொண்டது.கோடீசுவரனாகப் பிறந்திருந்தாலும் நட்பிற்காக,கொண்ட அரசியலுக்காக போராடினாரே எங்கெல்ஸ் அவருடைய நட்பை போன்றதல்ல இவர்களுடையது.அலுவலகத்தில் வேலை செய்வதால் என் நண்பன்,ஒன்றாக சாப்பிடுவதால் என் நண்பன்,வேலை முடிந்து நடந்து போகும் போது பேசிக்கொண்டு செல்வதால் என் நண்பன் தோசை,சாராயம் வாங்கித்தந்தால்என் நண்பன் இப்படி விபச்சார சந்தையாக மாற்றப்பட்ட இதனை நட்பு என்றே அழைக்கக்கூடாது.
..
ஒன்றரை வருடங்களாக நண்பர்களாயிருக்கிறார்களெனில் அவர்கள் எதைத்தான் பேசினார்கள்?பேசிக்கொண்டிருக்கிறார்கள்."பெண்களை கிண்டலடிப்பது,ஆபாசக்கதைகள் பேசுவது,தரக்குறைவாக நண்பர்களை பேசுவது"என்பதை தவிர வேறு எங்கேயும் போயிருக்காது.சொந்த அப்பனாகவேயிருந்தாலும் அரசியல் பேசினால் தான் அவரின் உண்மையன எண்ணத்தை புரிந்துகொள்ளமுடியும்.
..
சாதிவெறி பிடித்தமிருகத்தினால் கண்டிப்பாக நல்ல எண்ணங்களை கொண்டிருக்கமுடியது.அதற்கு தன் முகத்தை காட்ட வேண்டிய அவசியம் அலுவலகதத்தில் இல்லை,வாய்ப்பு கிட்டியிருந்தால் அங்கேயும் சரியாகவே பயன்படுத்தியிருப்பான்.சங்கரின் தனிப்பட்ட சூழ்நிலை காரணம் என கூற முடியாது.சாதி,மதக்கலவரங்களில் கொலை வெறியில் ஈடுபட்டபாசிஸ்டுகளுக்கும் சாதி,மதச்சூழல் தான் எனக்கூறி நியாயப்படுத்த முடியாது.
..
தனது அக்கா ஒடிப்போனதால் கோபம் வந்து கொலை செய்தானெனில்,தன் அக்காவின் தேவையை நிறைவேற்றாத அப்பன் மீதும்,மக்களின் வாழ்வை சீரழித்த இந்த அரசின் மேல் ஏன் கோபம் வரவில்லை.அவன் செய்த கொலைக்கு காரணம் கோபமல்ல ஆணாதிக்கம் தான்...............
..
சிலர் சொல்வது போல் கோபம் வந்தால் என்ன செய்வானென்பது தெரியாது என்பதையும் ஏற்க முடியாது,ஏனெனில் மனம் என்பது ஒரு உறுப்பல்ல.கை,கால்,கண் போன்றவை இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற செயல் முறையின் அடிப்படையை கொண்டது.மனம் என்பது மூளையின் சிந்திக்கும் பகுதி அதை நாம் தான் வளர்த்தெடுக்கவேண்டும்.சாலையில் பெண்ணைப்பார்த்து கிண்டலடிப்பதனாலும்,அலுவலகத்தில் மணிக்கணக்கில்வழிவதனாலும்.ஊர் மேய்வதாலும் மட்டும் ஆணாதிக்க சிந்தனை ஒழியது மாறாக ஊக்குவிக்கவேப்படும்.கை நிறைய சம்பளம் வாங்கினாலும் சங்கம் வைக்க அனுமதி இல்லாத ஐ.டி துறையில் அரசியல் பேசவேண்டிய வாய்ப்பு ஏற்படவில்லை.அதனால் தான் எதிரியை அறிக என்பதற்கு அர்த்தமும் புரியவில்லை.சாதி வெறி பிடித நாயுடன் நண்பர்களாயிருந்திருக்கிறோமென்ற குற்றவுணர்ச்சி ஏற்படவில்லை இனியும் ஏற்படபோவதில்லை தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் வரை.
..
------------------------------------------------------------------------------------------------
இந்த சமூகத்தில் நாகரீக வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்,சாதீய பெண்ணடிமை கட்டுமானங்களை கொண்டதாகவே இருக்கிறது.சீர்திருத்தங்களால் மயிரளவும் பிளக்க முடியாத கட்டுமானத்தை வர்க்கப்போராட்டம் என்ற எரிமலையால் மட்டுமே உடைக்கமுடியும்.

1 comment:

அசுரன் said...

//இந்த சமூகத்தில் நாகரீக வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்,சாதீய பெண்ணடிமை கட்டுமானங்களை கொண்டதாகவே இருக்கிறது.சீர்திருத்தங்களால் மயிரளவும் பிளக்க முடியாத கட்டுமானத்தை வர்க்கப்போராட்டம் என்ற எரிமலையால் மட்டுமே உடைக்கமுடியும்.//

கட்டுரை குறித்து விரிவான கருத்துக்களை பிறகு வைக்கிறேன். முதலில் இந்த கட்டுரை எழுதியதற்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதி வெறி என்பதை எதிர்த்த போராட்டம் என்பது வெறுமே பண்பாட்டு போராட்டம் மட்டும் நடத்தி மாற்றக் கூடியது அல்ல. அப்படித்தான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் - அதாவது அது ஒரு பண்பாட்டு பிரச்சனை என்று.

சாதி வெறியர்களை வீதிகளில் சந்தித்து அடித்து விரட்டுவதும், சட்ட வழிகளில் அவர்களை முறியடிப்பதும், இன்னபிற பண்பாட்டு சீர்திருத்த போராட்டங்கள் என்பதும் சாதியை ஒழிக்கும் போராட்டத்தின் ஒரு அங்கம்தான் எனினும் அது மட்டுமே சாதியை ஒழித்து விடாது. சமீபத்திய பெரியார் திராவிடர் கழக போராட்டம் பாராட்டத்தக்கது. சிறப்பானது. ஆயினும் அது சாதியை பண்பாட்டு பிரச்சினையாக மட்டும் சுருக்கியே இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது.

அசுரன்

இணைப்பு